கிருமித் தொற்று குறித்து நட்சத்திரங்கள்

கிருமித் தொற்று குறித்து நட்சத்திரங்கள்

2 mins read
fbef849e-6f1c-4ae1-a9f1-1c1b21170c0e
படம்: ஊடகம் -

சிறு குழந்தை முதல் முதி­ய­வர்­கள் வரை அனை­வ­ருக்­கும் தற்­பொ­ழுது தெரிந்த ஒரே சொல் 'கொரோனா'. மூன்று மாதத்திற்கு முன்­னால் 'கொரோனா' கிருமி உலக மக்­கள் அனை­வ­ரி­ட­மும் இப்­படி ஒரு பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என யாரும் எதிர்­பார்த்­தி­ருக்க மாட்­டார்கள். அந்த அள­விற்கு உல­கத்­தையே ஆட்­டிப்­ப­டைத்து வரு­கிறது.

இந்த கிரு­மி­யால் திரை உல­க­மும் பெரும் அள­வில் பாதிக்­கப்­பட்டு இருக்­கிறது. படப்­பி­டிப்­பு­கள் நிறுத்­தப்­பட்டுவிட்டன. அத­னால் படப்­பி­டிப்பு தளத்­தில் வேலை செய்­யும் தொழி­லா­ளர்­க­ளின் நிலைமை மிக­வும் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்­தா­லும் திரை நட்­சத்­தி­ரங்­கள் பல­ரும் தங்­க­ளின் ரசி­கர்­க­ளின் மீது அக்­கறை வைத்­துள்­ள­னர். தங்­க­ளின் விருப்ப நடி­கர் கூறும் ஒவ்­வொரு சொல்­லை­யும் கருத்­தில்­கொண்டு செயல்­படும் ரசி­கர்­கள் பலர் உள்ள­னர்.

அவர்­க­ளைக் கருத்­தில்­கொண்டு கொரோ­னா­வின் தீவி­ரம் குறித்­தும் ஆபத்து குறித்­தும் பொது­மக்­க­ளுக்கு திரை­யு­லக பிர­ப­லங்­கள் பலர் காணொ­ளி­களை வெளி­யிட்டு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

தனுஷ்: "மருத்­து­வர்­கள், தாதியர்கள், மருத்­துவ அலு­வ­லர்­க­ளுக்­கும் குடும்­பங்கள் இருக்கின்றன. தங்­கள் உயிரைப் பண­யம் வைத்­துப் போராடி வரு­கின்­ற­னர். அவர்­க­ளுக்­காக நாம் செய்ய வேண்­டி­யது ஒன்றே ஒன்­று­தான். அசட்­டுத் தைரி­யத்­து­டன் வெளியே சுற்றாமல் வீட்­டி­லேயே இருப்­ப­து­தான் நாம் அவர்­க­ளுக்­குச் செய்­யும் கைம்­மாறு," என்று கூறி­யுள்­ளார்.

திரிஷா: 'யுனி­செஃப்' நிறு­வ­னத்­தின் இந்­தி­யா­வுக்­கான நல்­லெண்­ணத் தூத­ராக இருக்­கி­றார் திரிஷா. அதனால் அவர் தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்ள விழிப்­பு­ணர்வு காணொ­ளியை வெளி­யிட்டு இருக்­கி­றார். பொது­மக்­கள் தங்­கள் கைகளைக் கழு­வுவது, பொது இடங்­களில் இரு­மல், தும்­மல் வந்­தால் செய்ய வேண்­டி­ய­வை பற்றி காணொளியை உருவாக்கி இருக்கின்றனர்.

சாந்­தனு: கொரோனா கிருமியால் பாதிக்­கப்­பட்­டால் என்­னென்ன அறி­குறி இருக்­கும் என்­பதை தெரிந்து கொண்டு அந்த அறி­குறி இருந்­தால் மட்­டும் மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­லுங்­கள். அனை­வ­ரும் மருத்­து­வ­ம­னையை முற்­று­கை­யிட்­டால் உண்­மை­யில் பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு சிகிச்சை அளிக்க கால­தா­மதம் ஆகும் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

கமல்­ஹா­சன்: விலகி இருத்­தல் அவ­சி­யம். வீட்­டில் குடும்­பத்­தோடு நேரத்தை செல­வி­டுங்­கள். மன­துக்­குப் பிடித்­த­மா­ன­வர்­க­ளு­டன் தொலை­பே­சி­யில் தின­மும் பேசுங்­கள். ஆனால் நேரில் வாருங்­கள் என்று கூப்­பிட்­டால் தய­வு­செய்து செல்லவேண்­டாம். அவர்­க­ளால் நமக்­கும் நம்­மால் அவர்­க­ளுக்­கும் பாதிப்பு ஏற்­ப­டா­மல் பொறுப்­பாக இருக்க வேண்­டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ரித்­விகா: 5 ரூபாய் முகக்­க­வ­சத்தை 50 ரூபாய்க்கு தன்­னி­டம் விற்க முயன்­ற­னர் என்று தன்­னு­டைய அனு­ப­வத்­தைக் கூறி­யி­ருக்­கி­றார். அத்­து­டன் "பணம் சம்­பா­திக்க இது நேரம் இல்லை. முகக்கவ­சத்தை சலுகை விலை­யில் தர­வேண்­டும். முடிந்­தால் ஏழை எளிய மக்­க­ளுக்கு இல­வ­ச­மா­கத் தர­வேண்­டும்," என்று கூறி­யுள்ளார்.

பார­தி­ராஜா: "பல­ போ­ராட்­டங்­களில் வென்­ற­வர்­கள் நாம். உடல் எதிர்ப்பு சக்­தி­யால் கொரோ­னா கிருமியை அழித்து விரட்­டு­வோம். சுகா­தா­ரம் ஒன்றே தற்­போ­தைய மருந்து," என்று கூறி­யுள்­ளார்.

நடி­கர் ரகு­மான்: "தய­வு­செய்து பொய்­யான தக­வல்­க­ளை­யும் பொய்­யான செய்­தி­களையும் நம்­பா­தீர்­கள். பாது­காப்­பாக இருங்­கள், பய­மில்­லா­மல் இருங்­கள், இந்தக் கிருமித்தொற்றை எதிர்ப்­போம். நம்­மால் முடி­யும்," என்று கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் படப்­பி­டிப்­புக்­காக ஜார்­ஜியா சென்று திரும்பி வந்த நடி­கர் பிர­பாஸ் தன்னால் மற்றவர்கள் பாதிக்கக்கூடாது என்று தன்­னைத்­தானே தனி­மைப்­ப­டுத்­திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.