ஆர்.கே.செல்வமணி: ஒரு மூட்டை அரிசி கொடுத்து உதவுங்கள்

1 mins read
012dd772-1186-443e-b572-8ffc3f6e30c8
கருணை உள்ளம் படைத்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியோர் மனது வைத்தால் பாதிக்கப்பட்ட திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவலாம் என்று இயக்குநரும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவருமான ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார். படம்: ஊடகம் -

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "படப்பிடிப்பு இல்லாமல் தினசரி ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஊழியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். பெப்சியில் சுமார் 25ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்களில் ஒரு வேளைச் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் தொழிலாளர்கள் 15,000 பேர். ஒரு குடும்பத்துக்கு ஒரு மூட்டை என்று கணக்கிட்டு பத்தாயிரம் உறுப்பினர்களுக்கு தலா ஒரு மூட்டை அரிசி அளிக்க வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஒரு மூட்டை 1,250 ரூபாய் என்று 15,000 குடும்பத்திற்கு ரூ.2 கோடி ஆகிறது. நல்ல நிலைமையில் இருக்கும் கருணை உள்ளம் படைத்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியோர் மனது வைத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வேளை கஞ்சியாவது குடிக்க முடியும். தயவுசெய்து உதவுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.