திரைத் துறை ஊழியர்களுக்கு கைகொடுக்கும் கலைஞர்கள்

கொரோனா கிரு­மித்­தொற்று கோடம்­பாக்­கத்­தை­யும் நிலை­கு­லைய வைத்­துள்­ளது. இத­னால் திரைத்­துறை தொழி­லா­ளர்­க­ளின் வரு­மா­னம் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் அவர்­களும் அவர்­தம் குடும்­பத்­தா­ரும் தத்­த­ளித்து வரு­கின்­ற­னர். 

இதை­ய­டுத்து சிவ­கார்த்­தி­கே­யன் உள்­ளிட்ட பலர், தொழி­லா­ளர்­க­ளின் நல­னுக்­காக நிதி­யு­தவி அளித்து வரு­கின்­ற­னர்.

கொரோனா பீதி கார­ண­மாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்­ளிட்ட அனைத்து திரை­யு­ல­கத்­தி­ன­ரும் படப்­பி­டிப்­பு­களை ஒத்­தி­வைத்­துள்­ள­னர். 

சினிமா சார்ந்த இதர பணி­க­ளும்­கூட ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் ஒட்­டு­மொத்த இந்­தி­யத் திரை­யு­ல­க­மும் முடங்­கி­யுள்­ளது. 

“இத­னால் நடி­கர்­கள் மட்­டு­மல்­லா­மல் தயா­ரிப்­பா­ளர்­கள், தொழி­லா­ளர்­கள் என அனைத்­துத் தரப்­பி­ன­ருக்­கும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. நடி­கர்­க­ளைப் பொறுத்­த­வரை ஒன்­றி­ரண்டு படங்­க­ளின் படப்­பி­டிப்பு தள்­ளிப் போவ­தைத் தவிர, வேறு பெரி­தாக இழப்­பில்லை. 

“சில படங்­க­ளின் வெளி­யீடு தாம­த­மா­வ­தும் புதுப்­பட வேலை­க­ளைத் தொடங்­கு­வது தள்­ளிப்­போ­வ­தும் தவிர்க்க முடி­யாத விஷ­யங்­கள். தயா­ரிப்­பா­ளர்­க­ளைப் பொறுத்­த­வரை, பட வெளி­யீடு தாம­த­மா­வ­தால் தயா­ரிப்­புச் செல­வுக்­காக பெற்ற கடன் தொகைக்கு ஒன்­றி­ரண்டு மாதங்­கள் வட்டி செலுத்­தும் சுமை மட்­டுமே இருக்­கும்,” என்­கி­றார்­கள் திரை­யு­லக விவ­ரப் புள்­ளி­கள். 

இந்­நி­லை­யில், தொழி­லா­ளர்­களின் நிலை­தான் பரி­தா­பத்­துக்­கு உ­ரி­யது.

தென்­னிந்­திய திரைப்­ப­டத் தொழி­லா­ளர் சம்­மே­ள­னத்­தின் தலை­வ­ரான ஆர்.கே.செல்­வ­மணி கூறு­கை­யில், “தொழி­லா­ளர்­க­ளுக்கு நாள் சம்­ப­ள­மும் படித்தொகையும் வழங்­கப்­ப­டு­கிறது. இரண்­டுமே படப்­பி­டிப்பு நடந்­தால்­தான் கிடைக்­கும். 

“ஆனால், இரண்டு வாரங்­கள் முதல் ஒரு மாதம் வரை படப்­பி­டிப்பு நடக்­க­வில்லை என்­றால் தொழி­லா­ளர்­கள் பாடு திண்­டாட்­ட­மா­கி­வி­டும். எனவே அனை­வ­ரும் அவர்­க­ளுக்கு உதவ முன்­வர வேண்­டும்,” என வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

இதை­ய­டுத்து, முன்­னணி நடி­கர்­கள் உட்­பட பல­ரும் தொழி­லா­ளர்­க­ளுக்­குப் பல்­வேறு வகை­யில் உத­வி வருகின்றனர். நடி­கர்­களில் முதல் ஆளாக சிவ­கு­மார் தமது இரு வாரி­சு­க­ளான சூர்யா, கார்த்­தி­யு­டன் இணைந்து பத்து லட்­ச ரூபாய் நிதி வழங்­கி­யுள்­ளார். 

நடி­கர் சிவ­கார்த்­தி­கே­யன் தன் பங்­காக பத்து லட்­ச ரூபாய் வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளார். நடி­கர் பார்த்­தி­பன் 250 மூட்டை அரிசி வழங்கி உள்­ளார். ஒவ்­வொன்­றும் 25 கிலோ எடை கொண்­ட­தா­கும். 

இதே­போல் நடி­க­ரும் இயக்­கு­ந­ரு­மான மனோ­பா­லா­வும் 10 மூட்டை அரிசி வழங்­கி­யுள்­ளார். 

திரைப்­ப­டத் தொழி­லா­ளர் சம்­மே­ள­னத்­தில் பல ஆயி­ரம் தொழி­லா­ளர்­கள் உறுப்­பி­னர்­க­ளாக உள்­ள­னர். தொழி­லா­ளர்­கள் நல­மாக இருந்­தால்­தான் திரைத்­துறை வள­மாக இருக்­கும் என்­கி­றார் ஆர்.கே. செல்­வ­மணி.

“திரைப்­ப­டப் பணி­கள் பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தால் 15,000 தொழி­லா­ளர்­கள் தவிக்­கின்­ற­னர். ஒரு குடும்­பத்­திற்கு ஒரு மூட்டை அரிசி தந்­தால், அவர்­கள் கஞ்சி, சோறாவது உண்டு உயிர்வாழ இய­லும். 

“பத்தாயிரம் உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒரு மூட்டை அரிசி அளிப்­ப­தாக இருந்­தால் அதற்கே இரண்டு கோடி தேவைப்­படும். சுமா­ரான அரிசிகூட ஒரு மூட்டை ரூ.1,250 ஆகிறது.

“உங்­க­ளோடு பணி­பு­ரிந்து உங்­க­ளோடு வாழ்ந்து வரும் தொழி­லா­ளர் குடும்­பங்­க­ளுக்கு உணவு, நிதி அளிப்­பீர் என கேட்­டுக்கொள்­கி­றோம்,” என்று ஆர்.கே. செல்­வ­மணி வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.

“இன்று காலை­யில்‌ லைட்­மேன்‌ சங்­கத்­தைச்‌ சேர்ந்த உறுப்­பி­னர்‌ ஒரு­வர்‌ கைபேசி வழி தொடர்பு கொண்டு, ‘சார் வேலைநிறுத்­தம்‌ எப்­பொ­ழுது முடி­யும்‌‘ என்று கேட்­டார். 15 முதல் 20 நாட்­கள்‌ வரை ஆக­லாம்‌ என்­றேன்.

“அதற்கு, ‘சார் நான்‌ வேலைக்­குப் போய்‌ செத்­தால்‌கூட பர­வா­யில்லை. உணவு இல்­லா­மல்‌ என்‌ குழந்­தை­கள்‌ பசி­யால்‌ சாவ­தை­விட நான்‌ கொரோனா கிருமியால் செத்­தா­லும்‌ பர­வா­யில்லை’ என்று வேதனையுடன் கூறினார்.

“அவ­ரது உணர்­வு­களை வெளிப்­ப­டுத்த என்­னி­டம் வார்த்­தை­கள் இல்லை,” என்று ஆர்.கே.செல்­வ­மணி மேலும் கூறி­யுள்­ளார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!