‘அந்தத் தொல்லை எனக்கில்லை’

திரைத்­து­றை­யில் பாலி­யல் சீண்­டல்­கள் அதி­க­ரித்து வரு­வ­தாக மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு­முறை யாரே­னும் புகார் எழுப்­ப­வ­தும் அதை­யொட்டி சில சர்ச்­சை­கள் வெடிப்­ப­தும் வாடிக்­கை­யாகிவிட்­டது.

பட வாய்ப்­புக்­காக தங்­க­ளைப் படுக்­கைக்கு அழைக்­கின்­ற­னர் என்று முன்­னணி நடி­கை­களே புகார் கூறும் அள­வுக்கு நிலைமை மோச­மாகி இருக்­கிறது.

இந்­நி­லை­யில், திரை­யு­ல­கில் பாலி­யல் சீண்­டல்­கள் இருப்­பது உண்­மை­தான் என்று நடிகை அனுஷ்கா கூறி­யுள்­ளார்.

அவர், மாத­வ­னு­டன் இணைந்து நடித்­துள்ள ‘நிசப்­தம்’ படம் விரை­வில் திரைக்கு வரவுள்­ளது. அந்தப் படத்தை விளம்­ப­ரப்­ப­டுத்­தும் நிகழ்ச்சி ஹைத­ரா­பாத்­தில் நடை­பெற்­றது.

இதில் கலந்­து­கொண்ட அனுஷ்­கா­வி­டம் நடி­கை­க­ளுக்கு ஏற்­படும் பாலி­யல் சீண்­டல்­கள் குறித்து கேள்வி எழுப்­பப்­பட்­டது.

அப்­போது தாம் எதை­யும் வெளிப்­ப­டை­யா­கப் பேசு­வ­து­தான் வழக்­கம் என்று அனுஷ்கா குறிப்­பிட்­டார்.

“பட­வாய்ப்­புக்­காக நடி­கை­களைப் படுக்­கைக்கு அழைக்­கும் சம்­ப­வங்­கள் திரைத்­து­றை­யில் நடக்­கவே இல்லை என்று என்­னால் உறு­தி­யா­கச் சொல்ல இய­லாது.

“ஆனால் எனக்கு அது­போன்ற அனு­ப­வம் எது­வும் ஏற்­ப­ட­வில்லை. ஆகவே, நான் எப்­போ­தும் வெளிப்­ப­டையாகவே இருந்­தி­ருக்­கி­றேன்.

“வாய்ப்பு பெறு­வ­தற்­காக நடி­கை­க­ளி­டம் இருந்து இது­போன்ற ஆதா­யங்­களை சினிமா பிர­மு­கர்­கள் எதிர்­பார்க்­கி­றார்­கள் எனில் அது மிக­வும் தவறு. இத்­த­கைய போக்­கைத் தவிர்க்க வேண்­டும்,” என்­றார் அனுஷ்கா.

இதற்­கி­டையே ‘நிசப்­தம்’ படக்­கு­ழு­வி­னர் பங்­கேற்ற தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­யில் அனுஷ்­கா­வும் கலந்துகொண்­டார். அப்­போது இயக்­கு­நர் கோடி ராம­கி­ருஷ்ணா குறித்து குறிப்­பிட்­ட­போது அவர் துக்­கத்தை மறைக்க இய­லா­மல் கண்­ணீர்விட்டு அழு­தார்.

“கோடி ராம­கி­ருஷ்­ணா­வின் இழப்பை இந்­தத் தரு­ணத்­தில் நான் அதி­க­மாக உணர்­கி­றேன். அவர் இன்­னும் சில நாட்­கள் நம்­மி­டையே இருந்­தி­ருக்­க­லாம்,” என்று குறிப்­பிட்­ட­போது, அனுஷ்காவின் கண்­களில் கண்­ணீர் திரண்­டது.

அனுஷ்கா தெலுங்­கில் நடித்த முதல் படம் ‘சூப்­பர்’. இதன் இயக்­கு­நர் பூரி ஜெகநாத். ஆனால் அவ­ருக்கு அதிக புக­ழை­யும் தனி அடை­யா­ளத்­தை­யும் பெற்­றுத் தந்த படம் ‘அருந்­ததி’. இதன் இயக்­கு­நர் கோடி ராம­கி­ருஷ்ணா. அவர் கடந்­தாண்டு கால­மா­னார். நிகழ்ச்­சி­யில் பேசி­ய­போது அதை அனுஷ்கா நினைவுகூர்ந்­தார்.

அண்­மை­யில் தாம் ஒரு­வரை காத­லித்­த­தா­க­வும் சூழ்­நிலை கார­ண­மாக அவ­ரைப் பிரிய நேர்ந்­த­தா­க­வும் கூறி­யி­ருந்­தார் அனுஷ்கா. இதை­ய­டுத்து யார் அந்த காத­லர் என ரசி­கர்­கள் தங்­க­ளுக்­குள் விவா­தித்து வரு­கி­றார்­கள்.

எனி­னும் தாம் காத­லித்­த­வ­ரைப் பற்­றிய விவ­ரங்­களை வெளி­யிட விரும்­ப­வில்லை என அனுஷ்கா திட்­ட­வட்­ட­மாக கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், அவ­ரது குடும்­பத்­தார் தகுந்த வரனை தொடர்ந்து தேடி வரு­வதா­கத் தெரி­கிறது. விரை­வில் அனுஷ்கா வீட்­டில் கெட்­டி­மே­ளச் சத்­தம் கேட்க வாய்ப்­புண்­டாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!