ஆனந்தி: புரிதல் ஏற்பட்டுள்ளது

அறி­முக நாய­கர்­க­ளு­டன் நடிப்­ப­தால் திரை­யு­ல­கில் தனது மதிப்பு எந்தவிதத்­தி­லும் குறைந்­து­வி­டாது என்­கி­றார் ‘கயல்’ ஆனந்தி.

‘என் ஆளோட செருப்ப காணோம்’ படத்தில் நடித்­த ­பி­றகு, சினி­மா­வைப் பற்­றிய ஒரு புதிய புரி­தல் ஏற்­பட்­டுள்­ள­தாக அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இந்­தப் படத்­துக்கு முன்பு வரை பெரிய நாய­கர்­க­ளு­டன் மட்­டுமே நடிக்­க­வேண்­டும் என ஆசைப்­பட்­டா­ராம். ஆனால் கதை­தான் ஒரு படத்­தின் முதன்மை நாய­கன் என்ற உண்­மையை இந்­தப் படம்­தான் புரியவைத்­த­தாம்.

அதன்­பி­றகு தமக்­கும் கதைக்கும் முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் படங்­களில் நடிக்­கத் துவங்­கி­ய­தாக சொல்­கி­றார்.

தற்­போது ஆனந்தி நடித்து முடித்­துள்ள ‘கமலி ஃப்ரம் நடுக்­கா­வேரி’ பட­மும் இவ­ரது புதிய கொள்­கைக்கு ஏற்­பவே அமைந்­துள்­ளது.

“சின்ன பட்­ஜெட் படம், அறி­முக நாய­கன், இயக்­கு­நர் உள்­ளிட்ட சில கார­ணங்­க­ளால் படத்தில் நடிக்க முத­லில் யோசித்­தேன்.

“ஆனால் இயக்­கு­நர் ஹைத­ரா­பாத் வரை என்­னைத் தேடி வந்து கதை சொன்­னார். அந்­தச் சந்­திப்பு நிக­ழும் வரை­யில் ஏதே­னும் கார­ணம் சொல்லி தவிர்த்­து­வி­ட­லாம் என்­று­தான் நினைத்­தி­ருந்­தேன்.

“ஆனால், கதை­யைக் கேட்ட பிறகு என் மனம் மாறி­யது,” என்­கி­றார் ஆனந்தி.

கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் படம் என்­ப­து­டன் ஒரு பெண்­ணின் பார்­வை­யில்­தான் படம் நக­ரு­மாம். பெண்­க­ளுக்கு இந்­தச் சமு­தா­யம் எந்த வகை­யில் ஆறு­த­லும் ஆத­ர­வும் கொடுக்­கத் தவ­று­கிறது என்­பதை படத்­தில் அல­சி­யுள்­ள­தா­கத் தக­வல்.

“இன்­ற­ள­வும் சில கிரா­மங்­களில் நல்ல கல்வி கிடைக்­கும் என்ற நம்­பிக்­கை­யில் பையன்­களை மட்­டும் தனி­யார் பள்­ளிக்­கும் பெண்­களை அர­சுப் பள்­ளிக்­கும் அனுப்­பும் வழக்­கம் உள்­ளது.

“பெண்­க­ளுக்­கு கிடைக்­காத ஆத­ர­வைப் பற்றி இந்­தப் படம் பேசும். அத­னால் பெண்­க­ளுக்கு இந்­தப் படம் ரொம்­பப் பிடிக்­கும்,” என்­கி­றார் ஆனந்தி.

இதில் அழ­கம்­பெ­ரு­மாள் இவ­ரது தந்­தை­யாக நடித்­துள்­ளார். இமான் அண்­ணாச்சி பேரா­சி­ரி­யர் கதா­பாத்­தி­ரத்­தி­லும் பள்­ளித் தோழி­யாக ஸ்ரீஜா­வும் நடித்­துள்­ள­னர்.

தற்­போது ஆனந்தி நடிப்­பில் ‘அலா­வு­தீ­னின் அற்­புத கேமரா’ பட­மும் தயா­ராகி உள்­ளது. வெளி­நா­டு­க­ளில்­தான் முக்­கிய காட்­சி­களை எடுத்­துள்­ள­ன­ராம்.

‘மூடர்­கூ­டம்’ நவீன் இயக்­கி­யுள்ள இப்­படத்­தில் பிக்­பாக்­கெட் அடிக்­கும் பெண்­ணாக நடித்­துள்­ளார் ஆனந்தி. இந்­தப் படம் ரசி­கர்­கள் மத்­தி­யில் தம்மை வேறு ­மா­திரி வெளிப்­ப­டுத்த உத­வும் என்­கி­றார்.

“முழுக்க கற்­ப­னைக்­கதை என்­ப­தால் சுவா­ர­சி­ய­மாக இருக்­கும். 50 நாட்­கள் படப்­பி­டிப்பு நடந்­த­போது ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வும் ஒரே குடும்­பம்போல் இருந்­தோம்.

“நவீன் சார் இயக்­கு­ந­ராக மட்­டும் இல்­லா­மல், படப்­பி­டிப்­புத் தளத்­தில் எல்லா வேலை­க­ளை­யும் இழுத்­துப் போட்­டுச் செய்­தார். அவர் மிகுந்த திற­மை­சாலி.

“ஒட்­டு­மொத்த குழு­வி­லும் நான் ­மட்டும்­தான் பெண். அத­னால் எதற்­கா­க­வும் ஏசா­மல் என்னை நன்­றா­கப் பார்த்­துக் கொண்­ட­னர். படவெளி­யீட்­டுக்­காக ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றேன்,” என்­றார் ஆனந்தி.

இவர் எம்­பிஏ பட்டப் ­ப­டிப்பை முடித்­த­வர். திரைப்­ப­டங்­களில் நடித்­தா­லும் படிப்பை மட்­டும் பாதி­யில் கைவி­டக்­கூ­டாது என்­ப­தில் உறு­தி­யாக உள்­ளா­ராம். அடுத்து முனை­வர் பட்­டம் பெறு­வ­தற்­கான முயற்­சியை மேற்­கொள்ள இருக்­கி­றார். தோழி­கள் பலர் எதற்­காக இவ்­வ­ளவு படிக்­கி­றாய் என்று கேட்­கி­றார்­க­ளாம்.

“நான் நன்­றா­கப்­ ப­டிப்­ப­தால் தொடர்ந்து படிக்­க­வேண்­டும் என என் கல்­லூரி முதல்­வர் சொல்­லி­யி­ருக்­கி­றார். அவ­ரது வார்த்­தை­க­ளுக்கு நான் எப்போதும் நிச்­ச­யம் மதிப்­ப­ளிப்­பேன்,” என்கிறார் ஆனந்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!