தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கன்னடத்தில் மறுபதிப்பாகிறது 'அசுரன்'

1 mins read
b416be89-65f5-4388-a361-ab0563d533dc
தமிழில் வசூலில் அசத்திய 'அசுரன்' படத்தின் கன்னட மறுபதிப்பு உருவாவது உறுதியாகி உள்ளது. கன்னடத்தில் சிவராஜ்குமார் நாயகனாக நடிப்பார் என கூறப்படுகிறது.  படம்: ஊடகம் -

தமிழில் வசூலில் அசத்திய 'அசுரன்' படத்தின் கன்னட மறுபதிப்பு உருவாவது உறுதியாகி உள்ளது. கன்னடத்தில் சிவராஜ்குமார் நாயகனாக நடிப்பார் என கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடி சேர்ந்து நடித்த படம் 'அசுரன்'. பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சில எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றிருந்த 'அசுரன்' படத்தின் பிற மொழி மறுபதிப்புக்கான உரிமையைப் பெறுவதில் பலத்த போட்டி நிலவியது.

இதன் தெலுங்கு மறுபதிப்பு உரிமையை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் பெற்றுள்ளது. தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கடேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பு முன்பே துவங்கி விட்டது.

எனினும் கொரோனா கிருமி அச்சம் காரணமாக படப்படிப்பு தடைபட்டுள்ளது.

இந்­நி­லை­யில் 'அசு­ரன்' கன்­னட மறு­ப­திப்பு உரி­மை­யைப் பெறு­வ­தற்கு சில முன்­னணி நாய­கர்­கள் மத்­தி­யில் போட்டி அதி­க­ரித்­தது. எனி­னும் இறு­தி­யில் சிவ­ராஜ்­கு­மார் இதில் நடிப்­பது உறு­தி­யாகி விட்­ட­தாம். இப்­ப­டத்தை ஜேக்­கப் வர்­கீஸ் இயக்­கு­வார் என்­றும் அதி­கா­ரப்­பூர்வ தக­வல் விரை­வில் வெளி­யா­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

சிவ­ராஜ்­கு­மார் கன்­ன­டத்­தில் நடித்து பெரும் வெற்றி பெற்ற 'ஜோகி' படம்­தான் தமி­ழில் 'பரட்டை என்­கிற அழ­கு­சுந்­த­ரம்' என்ற தலைப்­பில் தனுஷ் நடிக்க உரு­வா­னது. இப்­போது தனுஷ் நடித்த 'அசு­ரன்' படத்­தின் கன்­னட மறு­ப­திப்­பில் சிவ­ராஜ்­கு­மார் நாய­க­னா­கி­றார்.