'புதிய பழக்கங்களுக்கு மாறுவோம்'

'புதிய பழக்கங்களுக்கு மாறுவோம்'

1 mins read
fedffc49-7c47-42af-a8a0-170063f3eb21
இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி பழைய பழக்கங்களைக் கைகழுவி விட்டு, புதிய பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் நடிகை காஜல் அகர்வால். படம்: ஊடகம் -

இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி பழைய பழக்கங்களைக் கைகழுவி விட்டு, புதிய பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

இதற்காக இணையம் வழி நடத்தப்படும் புதிய பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துள்ளாராம்.

"தற்போது தியானம் கற்கிறேன். புத்தக வாசிப்பு பழக்கத்தையும் தொடங்கி இருக்கிறேன். சமையல், வீட்டு வேலை செய்வது, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவது என பொழுதைக் கழிக்கிறேன்.

"மற்றவர்களும் இதைச் செய்யுங்கள் என்பதே எனது வேண்டுகோள். இதற்கு முன்பு ஓய்வில்லாமல் உழைத்து, எப்போது ஓய்வு கிடைக்குமோ என்று காத்திருந்தவர்களுக்கு இந்த ஊரடங்கு வசதியாக உள்ளது," என்கிறார் காஜல்.