அரவிந்த்சாமி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் 'வணங்காமுடி'

அரவிந்த்சாமி போலிஸ் அதிகாரியாக நடிக்கும் 'வணங்காமுடி'

1 mins read
283dfa87-dccb-4ed3-aebc-b22e2913324c
செல்வா இயக்கும் வணங்காமுடியில் காவல்துறை அதிகாரியாக அரவிந்த்சாமி. படம்: ஊடகம் -

மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கணேஷ் தயாரிக்கும் படம் 'வணங்காமுடி'. செல்வா இயக்குகிறார். கடந்தாண்டு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி விவகாரத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவதாகத் தகவல். இதில் அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி சிம்ரன். மேலும் ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க, டி.இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். இளம்பெண்களை ஏமாற்றி பாலியல் குற்றங்களில் ஈடுபடும் இளையர்களைக் காவல்துறை அதிகாரி அரவிந்த்சாமி எப்படி சாதுரியமாகப் பிடிக்கிறார், சட்டத்தின் முன் நிறுத்துகிறார் என்பதுதான் கதைக்கருவாம். ஏப்ரலில் இப்படம் வெளியாவதாக இருந்தது. எனினும் தற்போது மே மாத இறுதியில் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.