யோகிபாபு, கருணாகரன் நடிக்கும் ‘பன்னிகுட்டி’

‘பன்னிகுட்டி’ என்று தனது படத்துக்குத் தலைப்பு வைத்துள்ளார் இயக்குநர் அனு சரண். ஏன் இந்தத் தலைப்பு என்று கேட்டால், அவர் கூறும் மற்ற விஷயங்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன.

கதிர் நடிப்பில் ‘கிருமி’ எனும் திகில் கதையைப் படமாக்கிய அனுபவம் உள்ளவர் இவர்.

இப்போது யோகி பாபு, கருணாகரன், லியோனி, சிங்கம் புலி, ராமர், தங்கதுரை என மிகப்பெரிய நகைச்சுவைப் பட்டாளத்தோடு ‘பன்னிகுட்டி’யை உருவாக்கி வருகிறார்.

“ஒரு பன்றிக்குட்டியை இரண்டு குழுக்கள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் எழுகிறது. இந்த ஒற்றை வரிக் கதையை வைத்துக்கொண்டு, வணிக ரீதியிலான, நகைச்சுவையான திரைக்கதையை அமைத்துள்ளோம்.

“படத்தில் பெரும் பன்றிக்கூட்டத்தைக் காட்டியுள்ளோம். அதற்காக கணினித் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தியதாக முடிவுக்கு வரவேண்டாம்.

“இது ‘கிருமி’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும். முழுக்க ஜாலியான படம். இதற்காக கொஞ்சம் மெனக்கெட்டுள்ளேன்.

“என் நண்­பர் ரவி­மு­ரு­கையா சொன்ன ‘பன்­னி­குட்டி’ கதை நினை­வுக்கு வந்­த­தும் உடனே அவ­ரு­டன் கலந்து பேசி­னேன். நிறைய விவா­தித்­தோம். அவ­ருக்கு இயல்­பா­கவே நகைச்­சுவை உணர்வு அதி­கம்.

“கிராமப்புற பின்னணியில் இருந்து வந்தவர். அவரும் நானும் சேர்ந்து திரைக்கதை எழுதியிருக்கிறோம். படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியும் மண்வாசனையோடு இருக்கும். முக்கியமாக படத்தின் கதைக்களமாக மதுரை அருகே இருக்கும் கிராமத்தைக் காட்டியிருக்கிறோம்.

“கிட்­டத்­தட்ட ஆறு­மாத கால இடை­வெ­ளி­யில் நிறைய கிரா­மங்­களைச் சுற்­றிய பிறகே காட்­சி­க­ளைப் பட­மாக்க முடிவு செய்­தோம். இதற்­காக கள ஆய்வு மேற்­கொண்­டேன்.

“பன்றி வளர்ப்பு தற்­போது குறைந்துகொண்டே வரு­கிறது. அத­னால் பன்­றிக் கூட்­டத்­தைக் காட்­டு­வ­து சவாலாக இருந்­தது. ஒவ்­வொரு ஊரி­லும் பன்றி வளர்ப்­ப­வர்­க­ளைத் தேடி அலைந்து கண்­டு­பி­டிக்க வேண்­டி­யி­ருந்­தது.

“படத்­தின் கதையை எழு­தும்­போதே கரு­ணா­க­ரன், யோகி­பாபு இரு­வ­ரும் மன­தில் வந்­தனர். இவர்­கள்­தான் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். இரு­வ­ரும் நடிப்­பில் தங்­கள் பலத்தை நிரூ­பித்­துள்­ள­னர்,” என்­கி­றார் இயக்­கு­நர் அனு சரண்.

இதில் கரு­ணா­வுக்கு லட்சுமி பிரியா­வும் யோகி­பா­பு­வுக்கு மலை­யாள நடிகை அஸா­னா­வும் ஜோடி­யாக நடித்­துள்­ள­னர். படம் விரை­வில் வெளி­யீடு காணு­மாம்.

“பன்­றி­க­ளைக் கட்டி மேய்ப்­பது சுல­ப­மல்ல. ஆனா­லும் படப்­பிடிப்புக்கு அழைத்து வரப்­பட்ட அவை நாங்கள் சொல்­வ­தை­யெல்­லாம் கேட்டு ஒத்­து­ழைப்பு வழங்­கின. பன்­றி­க­ளுக்கு தேன் மிட்­டாய் ரொம்பப் பிடித்­திருந்தது.

“தின­மும் மிட்­டாய் கொடுத்தே அவற்றை எங்­கள் வழிக்­கு கொண்டு வந்­தோம். என்னைப் பொறுத்தவரை பன்­றிக்­குட்­டி­களும் கூட ஸ்டைல் செய்­யக்­கூ­டி­யவை தான். அவற்­றின் உடல்­மொ­ழியை ரசி­கர்­க­ளுக்­குப் பிடிக்­கும் வகை­யில் பட­மாக்கி உள்­ளோம். இது வித்தியாசமான படமாக இருக்கும்,” என்று சிரிக்­கி­றார் அனு சரண்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!