கொரோனா கிருமியால் சில நல்ல விஷயங்களும் நடக்கின்றன. குடும்பத்தார் அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் குடும்ப உறவுகள் வலுப்படும்.
மணமுறிவு பெற்று பிரிந்த நட்சத்திர தம்பதியரை ஒன்று சேர்த்து வைத்துள்ளது கொரோனா கிருமி.
இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், சுசானா தம்பதிக்கு 2000ல் திருமணம் நடந்தது. இரண்டு மகன்கள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் 2014ல் விவாகரத்து செய்து பிரிந்தார்கள். மகன்கள் ஹிருத்திக் ரோஷனுடன் வசித்து வருகிறார்கள்.
ஊரடங்கு உத்தரவின் போது தனது மகன்கள் வீட்டில் தனிமையில் முடங்கி சிரமப்படக்கூடாது என்பதற்காக ஹிருத்திக் ரோஷனின் வீட்டுக்கு வந்து அவர்களுக்குத் துணையாக இருக்கிறார் சுசானா.
அவர் தனது வீட்டுக் கட்டிலில் காப்பி குடித்தபடி இருக்கும் புகைப்படத்தை ஹிருத்திக் ரோஷன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
"நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், எனது முன்னாள் மனைவி சுசானா எங்கள் குழந்தைகளுக்காக தானாக முன்வந்து எனது வீட்டில் தங்கி இருக்கிறார். அவருக்கு நன்றி," என்று பதிவிட்டுள்ளார்.
தாய் சுசானா வீட்டிற்கு வந்த பிறகு மகன்கள் இருவரிடமும் உற்சாகம் பிடிபடவில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் ஹ்ருத்திக்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரிந்த தம்பதியர் மகன்களின் நலனுக்காக ஒன்று சேர்ந்துள்ள நிலையில், இது தொடர்பாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஹ்ருத்திக் ரசிகர்கள் பலரும் உற்சாகத்துடன் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

