அருண் விஜய்க்கு போட்டியாக உடம்பை ஏற்றும் கௌதம் கார்த்திக்

அருண் விஜய்க்கு போட்டியாக உடம்பை ஏற்றும் கௌதம் கார்த்திக்

1 mins read
c5f4d501-9dac-4391-aed1-e6c6cd038c4d
கௌதம் கார்த்திக் தற்போது அடுத்த படத்திற்காக உடம்பை மெருகேற்றி வருகிறார். தனது டுவிட்டர் பதிவில் 'ஒவ்வொரு மேகத்திற்குள்ளும் ஒரு சிறந்த புதையல் உள்ளது' என கடின உழைப்பு குறித்து பதி விட்டுள்ளார். இந்த  படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. படம்: ஊடகம் -

தமிழ் சினிமாவிற்கு வரும் வாரிசு நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கின்றனர். பலர் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய்விடு கின்றனர். அப்படி தமிழ் சினிமா வில் விஜயகுமாரின் வாரிசு நடிகராக அறிமுகமாகி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடியவர்தான் அருண் விஜய்.

ஆரம்பத்தில் கவனிக்கப்படாத நடிகராக இருந்தாலும் சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் வந்து தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ளார்.

இவரைப் போலவே மற்றொரு வாரிசு நடிகரான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து 'ஹாரா ஹாரா மஹாதேவகி', 'என்னமோ ஏதோ', 'இருட்டு அறையில் முரட்டு குத்து,' 'மிஸ்டர் சந்திரமௌலி', 'தேவராட்டம்' உள்ளிட்ட படங் களில் நடித்துள்ளார். இவர் தற்போது அடுத்த படத்திற்காக உடம்பை மெருகேற்றி வருகிறார்.

தனது டுவிட்டர் பதிவில் 'ஒவ்வொரு மேகத்திற்குள்ளும் ஒரு சிறந்த புதையல் உள்ளது' என கடின உழைப்பு குறித்து பதி விட்டுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.