மகிமா: ரசிகர்களும் பின்பற்ற வேண்டும்

மகிமா: ரசிகர்களும் பின்பற்ற வேண்டும்

1 mins read
8014931e-4b95-493f-b39b-1e0e7606edf7
ஊரடங்கு உத்தரவின்போது என்னதான் செய்வது என பலரும் குழம்பும் நிலையில் நடிகை மகிமா நம்பியார் அசத்தலாக பல விஷயங்களைச் செய்து வருகிறார். படம்: ஊடகம் -

ஊரடங்கு உத்தரவின்போது என்னதான் செய்வது என பலரும் குழம்பும் நிலையில் நடிகை மகிமா நம்பியார் அசத்தலாக பல விஷயங்களைச் செய்து வருகிறார்.

தன் வீட்டை அழகுபடுத்தும் பணியின் ஓர் அங்கமாக வீட்டுச் சுவர்களில் இவரே பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறாராம்.

வீட்டில் அடைந்து கிடப்பது, தனக்குள் இருக்கும் பிகாசோவை வெளியில் வரவைத்துள்ளது என்று கூறுகிறார் மகிமா.

கடந்த 4 நாட்களாக கையில் தூரிகையும் அருகில் பல வண்ணங்களுமாக வீட்டில் வலம் வருபவர், தான் சுவரில் ஓவியம் தீட்டும் காணொளிப் பதிவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து ஓவியங்கள் அற்புதமாக இருப்பதாக பலரும் இவருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

"நான்கு நாட்­க­ளுக்­குள் எனக்­குள் இருக்­கும் சில எதிர்­பார்ப்­பு­களை நானே பூர்த்தி செய்து கொண்­டது திருப்தி அளிக்­கிறது," என்று உற்­சா­கத்தை வெளிப்­படுத்துகி­றார் மகிமா.

இவ்வழியை ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்கிறார்.