பாடகி பரவை முனியம்மா காலமானார்

பாடகி பரவை முனியம்மா காலமானார்

2 mins read
e85f172d-2d12-4cf3-9dc2-6425045bf7c7
படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுடன் பரவை முனியம்மா. படம்: ஊடகம் -

பிர­ப­ல­மான நாட்­டுப்­புற பாட­கி­யும் நடி­கை­யு­மான பரவை முனி­யம்மா நேற்று கால­மா­னார். அவ­ருக்கு வயது 83.

கடும் மூச்­சுத் திண­ற­லால் அவ­திப்­பட்டு வந்த அவ­ரது உடல்­நிலை நேற்­று­முன்­தி­னம் மோச­மா­னது. இதை­ய­டுத்து தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டும் பல­னின்றி அவர் உயிர் நீத்­தார்.

நடி­கை­யாக மிளிர்வதற்கு முன்பே நாட்­டுப்­புற பாடல்­கள் மூலம் தமி­ழ­கத்­தில் பர­வ­லாக அறி­யப்­பட்டவர் முனி­யம்மா. 40 ஆண்­டு­க­ளாக தமி­ழ­கம் மட்­டு­மன்றி பல்­வேறு நாடு­க­ளி­லும் கச்­சே­ரி­கள் நடத்தி உள்­ளார். அவ­ருக்கு தமி­ழக அரசு 'கலை­மா­மணி பட்­டம்' வழங்கி கௌ­ர­வித்­தது.

விக்­ரம் நடித்த 'தூள்' படத்தின் மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் அறி­மு­க­மான பரவை முனியம்­மா­வுக்கு ஆரம்­பமே அமர்க்­க­ள­மாக இருந்தது.

அதன் பிறகு மள­ம­ள­வென 80க்கும் மேற்­பட்ட படங்­களில் நடித்து முடித்­தார். சிவ­கார்த்­தி­கேயன் நடித்த 'மான் கராத்தே' அவர் கடை­சி­யாக நடித்த படம்.

பரவை முனி­யம்­மா­வுக்கு 3 மகன்­களும் 3 மகள்­களும் உள்­ள­னர். மகன்­களில் ஒரு­வர் மூளை வளர்ச்சி குறைந்­த­வர். தாம் இறந்து போகும் கடைசி நிமி­டம் வரை இவரை நினைத்­து­தான் வெகு­வாக கவ­லைப்­பட்­டா­ராம் பரவை முனி­யம்மா.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பே வறுமை இவரை விரட்­டத் துவங்­கி­யது. அப்­போது மறைந்த முதல்­வர் ஜெய­ல­லிதா இவ­ரு­டைய நிலையை அறிந்து அரசு சார்­பில் 6 லட்ச ரூபாய் நிதி­யு­தவி அளித்­தார்.

அதன் பின்­னர் நடி­கர்­கள் விஷால், சிவ­கார்த்­தி­கே­யன், அபி சர­வ­ணன் உள்­ளிட்­டோ­ரும் அவ­ருக்கு உத­விக்­க­ரம் நீட்­டி­னர்.

அதி­லும் நடி­கர் அபி சர­வ­ணன் முனி­யம்­மா­வின் கடைசி நாட்­களில் அவ­ருக்­குப் பல வகை­யில் உத­வி­ய­தா­கத் தக­வல். முனி­யம்மா கால­மா­கி­விட்­ட­தாக கடந்த இரண்டு ஆண்­டு­களில் பல­முறை வதந்­தி­கள் பர­வின.