சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடியதோடு சில பாடல்களையும் பாடி அவர்களை மகிழ்வித்துள்ளார் நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியா.
வழக்கமாக பிரபல பாடகர்கள் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் ஒரு பாடலைப் பாட சில ஆயிரங்களேனும் பெறுவர்.
ஆனால், நேற்று முன்தினம் ரசிகர்ளுடன் உரையாடியபோது அவர்கள் விரும்பிக் கேட்ட அனைத்துப் பாடல்களையும் பாடி மகிழ்வித்தார் ஆன்ட்ரியா.
ஆங்கிலப் பாடல் ஒன்றை அவர் பாடியதற்கு பலத்த வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. கொரோனா கிருமி விவகாரம் காரணமாக மக்கள் வீட்டிற்குள் அச்சத்துடன் முடங்கியிருக்கும் நிலையில் உண்மையான கலைஞர்களுக்கே உரிய இயல்புடன் பிரதிபலன் எதையும் எதிர்பார்க்காமல் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் ஆன்ட்ரியா.

