அக்‌ஷய்குமார் ரூ.25 கோடி நன்கொடை

கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் மக்கள் நிதி அளிக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் மோடி. 

இதையடுத்து 25 கோடி ரூபாய் அளிப்பதாக நடிகர் அக்‌ஷய்குமார் அறிவித்துள்ளார். இவ்வளவு பெரிய தொகையை அளிக்க முன்வந்ததற்காக பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நிதி அளிப்பது குறித்து தமது கணவரிடம் பேசினாராம் அக்‌ஷய் மனைவி டுவிங்கிள் கன்னா.

“இந்த மனிதர் என்னைப் பெருமைப்படுத்துகிறார். இது பெரிய தொகையாக இருப்பதால் அவருக்குச் சம்மதமா என்று அவரிடம் கேட்டேன்.

“அதற்கு, ‘எதுவும் இல்லாமல் தொடங்கினேன். இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். இல்லாதவர்களுக்கு உதவி செய்வதில் இருந்து எப்படி பின்வாங்க முடியும்?’ என்று கூறினார்,” என டுவிங்கிள் கன்னா தெரிவித்துள்ளார்.