'காதல் கைகூடவில்லை'

3 mins read
d83c7258-41a8-45f1-83a1-0253a3fd1dd6
அனைத்­து­வி­த­மான விமர்­ச­னங்­க­ளை­யும் கடந்து செல்­லவே விரும்­பு­கி­றேன். என்­னு­டைய இந்­தப் போக்கு குறித்­தும் விமர்­சிக்­கப்­படுவேன் என்­பதை நன்கு உணர்ந்­தி­ருக்­கி­றேன் என்­கி­றார் பூர்ணா. படம்:ஊடகம் -

தேவை­யின்றி தன்னை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு பதில்­சொல்ல விரும்­ப­வில்லை என்­கி­றார் நடிகை பூர்ணா. தாம் ஒரு­வ­ரைக் காத­லித்­த­தா­க­வும் அந்­தக் காதல் கைகூ­ட­வில்லை என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் மனம் திறந்­துள்­ளார்.

நாய­கி­யாக தமிழ்த் திரை­யு­ல­கில் அறி­மு­க­மான பூர்­ணா­வுக்கு தொடக்­கத்­தில் நிறைய வாய்ப்­பு­கள் கிடைத்­தா­லும் சில படங்­க­ளின் தோல்­வி­யால் மிளிர முடி­ய­வில்லை.

இதை­ய­டுத்து சில காலம் நடிக்­கா­மல் ஒதுங்கி இருந்­த­வர் பின்­னர் நாய­கி­யாக இல்­லா­விட்­டா­லும் முக்­கி­யத்­து­வம் அளிக்­கும் கதா­பாத்­தி­ரங்­களில் தோன்­றி­னார். மேலும் எதிர்­மறை வேடங்­க­ளி­லும் இவரை திரை­யில் காண முடிந்­தது. 'சவரக்கத்தி' படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

தற்­போது மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் வாழ்க்கை வர­லாற்றை சொல்­லும் 'தலைவி' படத்­தில் நடித்து வரு­கி­றார் பூர்ணா. இதில் ஜெய­ல­லி­தா­வாக கங்­கனா ரணா­வத்­தும் சசி­க­லா­வாக பூர்­ணா­வும் நடிக்­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் திரைத்துறைக்கு வந்த பிறகே தாம் அதி­க­மாக விமர்­சிக்­கப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்­ளார் பூர்ணா.

"என்­னு­டன் பிறந்­த­வர்­கள் ஐந்து பேர். நான் அதை­விட ஒரு குழந்­தையை கூடு­த­லாக பெற்று, ஆறு பேருக்கு அம்­மா­வாக விரும்­பு­கி­றேன். ஏனெ­னில் கர்ப்­பம், பிர­ச­வம் போன்­ற­வற்றை நான் ரசித்து அனு­ப­விக்க விரும்­பு­கி­றேன்.

"என்­னு­டைய தாயார், சகோ­த­ரர்­கள் நால்­வ­ரை­யும் வச­தி­யான மருத்­து­வ­ம­னை­களில் தான் பிர­ச­வித்­தி­ருக்­கி­றார். நான் மட்­டும் ஆரம்ப சுகா­தார மையத்­தில் பிறந்­தி­ருக்­கி­றேன்.

"கிரா­மங்­களில் பிர­ச­வத்­திற்­கா­கவே ஒரு அறை­யை­கட்டி வைத்­தி­ருப்­பார்­கள். நான் பிறந்த அந்த அறை இப்­போது இடிந்து தரை­மட்­ட­மாக கிடக்­கிறது. அந்த பகு­திக்­குச் செல்­லும்­போது என் தாயார் அதை சுட்­டிக்­காட்டி, 'பெரிய நடி­கை­யான பூர்ணா இந்த நட்­சத்­திர தங்­கு­வி­டுதி போன்ற அறை­யில்­தான் பிறந்­தார்' என்று சிரித்­த­படி சொல்­வார்," என்­கி­றார் பூர்ணா.

மகள் சிறந்த நடி­கை­யாக வேண்­டும், புகழ்­பெற வேண்­டும் என்று பூர்­ணா­வின் தாய் மிக­வும் விரும்­பி­னா­ராம். இதற்­காக மகளை நட­னம் கற்க வைத்­துள்­ளார்.

சிறு வய­தில் கோவில்­க­ளி­லும் பிற வழி­பாட்டு தலங்­க­ளி­லும் நட­னம் ஆடி­யுள்­ளார் பூர்ணா. இத­னால் அதி­கம் விமர்­சிக்­கப்பட்­டா­ராம்.

"திரைத் துறைக்கு வந்­த­தும் அதி­க­மாக விமர்­சிக்­கப்­பட்­டேன். ஆனால் நான் சார்ந்­தி­ருக்­கும் மதத்­தில் அதிக நம்­பிக்கை கொண்­ட­வள். நினைவு தெரிந்த நாளில் இருந்து எல்லா புண்­ணிய நாட்­க­ளி­லும் நோன்பு இருந்­தி­ருக்­கி­றேன்.

"இது தெரி­யா­மல் சிலர் என்னை விமர்­சிக்­கி­றார்­கள். அதை நான் பொருட்­ப­டுத்­து­வ­தில்லை. அத்­த­கைய விமர்­ச­னங்­க­ளுக்கு பதி­ல­ளிக்­க­வும் நான் விரும்­ப­வில்லை. ஏனெ­னில் பதி­லுக்கு பதில் பேசிக் கொண்­டி­ருந்­தால் அதற்கு முற்­றுப்­புள்­ளியே வைக்க முடி­யாது.

"எனவே நான் அனைத்­து­வி­த­மான விமர்­ச­னங்­க­ளை­யும் கடந்து செல்­லவே விரும்­பு­கி­றேன். என்­னு­டைய இந்­தப் போக்கு குறித்­தும் விமர்­சிக்­கப்­படுவேன் என்­பதை நன்கு உணர்ந்­தி­ருக்­கி­றேன்," என்­கி­றார் பூர்ணா.

இவ­ரும் ஒரு கட்­டத்­தில் காதல் வயப்­பட்­டுள்­ளார். ஆனால் சில விஷ­யங்­கள் எதிர்­பார்ப்­புக்கு ஏற்ப அமை­யா­த­தால் அந்தக் காதல் கைகூ­டா­மல் போய்­விட்­ட­தாம்.

இது குறித்து அதி­கம் பேச விரும்­ப­வில்லை என்று சொல்­லும் பூர்ணா, அந்­தக் கடந்த கால காதலை மிக­வும் மதிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"எனக்­கும் ஒரு காதல் இருந்­தது. ஆனால் இரு­வ­ருமே ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் வலியைத் தரா­மல் பிரிந்­து­விட்­டோம். அந்தக் காதலைப் பற்றி என் குடும்­பத்­தி­ன­ருக்­கும் எனக்கு நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்­கும் நன்கு தெரி­யும்.

"வீட்­டில் எல்­லோ­ரது சம்­ம­தத்­து­ட­னும் என் திரு­ம­ணம் நடக்­க­வேண்­டும் என்­பது அம்­மா­வின் ஆசை. ஆனால் அந்­தக் காத­லில் அது நடக்­காது என்­பதை எங்­க­ளால் உணர முடிந்­தது. அத­னால் தான் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் நன்கு புரிந்­து­கொண்ட போதி­லும் வாழ்க்­கை­யில் இணை­யா­மல் பிரிந்து நிற்க வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டது," என்­கி­றார் பூர்ணா. 'தலைவி' படம் நிச்­ச­யம் பெரிய அள­வில் பேசப்­படும் என்­றும் அனைத்து தரப்பு ரசி­கர்­க­ளா­லும் இந்­தப் படம் ஏற்­றுக் கொள்­ளப்­படும் என்­றும் தாம் நம்­பு­வ­தா­கச் சொல்­கி­றார் பூர்ணா.