பிரபுதேவா படத்தில் அமைரா

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் ‘பஹிரா’. 

இதில் அமைரா தஸ்தூர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல். இவரைத் தவிர மேலும் நான்கு நாயகிகள் உள்ளனராம். நால்வரில் காயத்ரியும் ஒருவராம். மற்ற மூவரும் புதுமுகங்கள் எனத் தகவல்.

சைக்கோ மனநிலை கொண்ட ஒருவரைப் பற்றிய கதையை விவரிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்து கோவாவிலும் இலங்கையிலும் முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளனர். முதன்மை நாயகியான அமைராவுக்கு இப்படத்தின் கதை மிகவும் பிடித்துவிட்டதாம். அதிலும் பிரபுதேவாவுடன் நடிப்பது உற்சாகம் அளிப்பதாகச் சொல்கிறார். ஒரு பாடல் காட்சியில் பிரபுதேவாவுடன் இணைந்து இவர் அசத்தலாக நடனமாடி உள்ளார். இப்பாடல் இளையர்களை நிச்சயம் கவரும் என்கிறது படக்குழு.