வீட்டில் பிரியாணி சமைத்து பரிமாறிய நடிகர் சூரி

1 mins read
8594e815-d191-4732-b521-cee7601b4f0b
நடிகர் சூரி தன் மகன் சரவணனுடன் விளையாடுகிறார். படம்: ஊடகம் -

படப்­பி­டிப்பு இல்­லா­த­தால் குடும்­பத்து­டன் நேரம் செல­வ­ழிக்க முடி­கிறது என மகிழ்­கி­றார் நடி­கர் சூரி. அதே­ச­ம­யம் கொரோனா கிரு­மித் தொற்று குறித்த காணொ­ளிப் பதி­வு­களை வெளி­யிட்டு மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்­வும் ஏற்­ப­டுத்தி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் வீட்­டில் தாம் பிரி­யாணி சமைக்­கும் ஜாலி­யான காணொ­ளி­யை­யும் வெளி­யிட்­டுள்­ளார் சூரி. தான் சமைத்த பிரி­யா­ணியை ருசி பார்க்­கு­மாறு கேட்­டுக்­கொள்ள, அவர் மனை­வி­யும் ஒரு வாய் சாப்­பிட்­டு­விட்டு தூ எனத் துப்­பு­கி­றார். உடனே சூரி, 'என்­னாச்சு?' என்று கேட்க, 'வாயில உப்பு' என்­கி­றார் அவர் மனைவி.

'வாயில உப்பை எதற்கு எடுத்­துப் போட்ட? கறியை சாப்­பிட வேண்­டி­ய­து­தானே?' என்று கூறி கிண்­ட­ல­டிக்­கி­றார்.

இந்­தக் காணொளிப் பதிவு இணை­யத்­தில் வேகமாகப் பரவி வரு­கிறது.

இதற்­கி­டையே கிரா­மப்­புற மக்­க­ளுக்கு கொரோனா கிரு­மித் தொற்று குறித்த விழிப்­பு­ணர்வு இல்லை என்றும் சூரி கவ­லைப்­ப­டு­கி­றார்.

"பிற­ரு­டன் பழ­கா­மல் இருப்­பது சற்று கடி­ன­மா­கத்தான் இருக்­கும். இருப்­பி­னும் இதை பொறுத்­துக் கொள்­ளத்தான் வேண்­டும்," என காணொளிப் பதிவு ஒன்றில் சூரி குறிப்பிட்டுள்ளார்.