சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன்

‘ஜோக்கர்’ படத்தில் அருமையாக நடித்ததாக பாராட்டப்பட்டாலும் இளம் நாயகி ரம்யா பாண்டியனுக்கு உரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் திரையுலகை விட்டு சற்று விலகியே இருந்தார்.

அவர் புடவையில் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கும் சில புகைப்படங்கள் இணையத் தில் பரவின. இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதன் மூலம் மேலும் பிரபலமானவருக்கு சமூக வலைத்தளங்களில் தனி ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது. 

இந்நிலையில், சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்திலும் சி.வி.குமார் தயாரிக்கும்  படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம் ரம்யா. இத்தகவலை அவரே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.