காஜல், தமன்னாவுக்கு கொரோனா சோதனை நடத்த வலியுறுத்து

மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்ட தமன்னா, காஜல் அகர்வால் இருவருக்கும் கொரோனா கிருமி பரிசோதனை அவசியம் செய்யவேண்டும் என்று சில கோலிவுட் திரையுலக பெரும்புள்ளிகள் அழுத்தமாகக் கூறத் துவங்கியுள்ளனர். இதனால் அண்மைகாலமாக இருவருடனும் நெருங்கி நடித்த நாயகன்களும்  சேர்ந்து பழகிய நண்பர்களும் மிரண்டு போய் உள்ளதாக ஊடகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன. 

தன் மகிழ்ச்சிக்காக என்றில்லாமல் தன் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காகவே அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடிக்கும் நாயகிகளில் தமன்னாவும் காஜல் அகர்வாலும் மிக முக்கியமானவர்கள். 

நெருங்கிய தோழிகளான இருவருமே ஒல்லி உடல்வாகு உள்ள வட இந்தியர்கள், அளவாக கவர்ச்சி காட்டும்  நாயகிகள் என்று பல ஒற்றுமைகளைக் கூறிக்கொண்டே போகலாம். 

இந்நிலையில், இந்த ஆண்டு ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் இவர்கள் கலந்துகொண்டார்களாம். இந்த விழா நடந்த நேரத்தில்தான் சீனாவில் கொரோனா கிருமியின் தாக்கம் உச்சம் தொட்டது. 

இப்போது இந்தியாவில் இக்கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஈஷா சிவராத்திரி விழாவில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் கொரோனா மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது. 

இதற்கிடையே படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மும்பையில் உள்ள வீட்டுக்குள் முடங்கியுள்ள காஜல் கூறுகை யில், “இந்த சமயத்தில் எந்த வேலையும் செய்யாமல் நன்றாக சாப்பிட்டு சாப்பிட்டுத் துாங்கினால் உடல் எடை அதிகரித்து, அழகைக் கெடுத்துவிடும் என நெருங்கிய தோழிகள் அறிவுரை கூறியுள்ளனர். இதனால் தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டுக்குள்ளேயே வியர்த்துக்கொட்டும் வகையில் விறு விறுக்க நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறேன்,” என்கிறார்.