மகிமாவின் கனவு வேடம்

கோடம்­பாக்­கத்­தில் நல்ல வாய்ப்­பு­கள் கிடைப்­ப­தா­க­வும் தமி­ழில் தனது திற­மையை நிரூ­பித்த பிறகே மலை­யா­ளத் திரை­யு­ல­கம் தம்மை அங்­கீ­க­ரித்­தது என்­றும் சொல்­கி­றார் இளம் நாயகி மகிமா நம்­பி­யார். எனவே, எப்­போ­துமே தமி­ழுக்­கு­தான் முன்­னு­ரிமை என்­கி­றார்.

“சாட்டை’யில் அறி­மு­க­மான இவ­ருக்கு ‘குற்­றம் 23’இல் நடித்து முடிக்­கும் வரை எந்த மலை­யா­ளப் பட வாய்ப்­பும் தேடி­வ­ர­வில்­லை­யாம். ‘குற்­றம் 23’ வெற்றி பெற்ற பிற­கு­தான் மம்­முட்­டி­யு­டன் ‘மாஸ்­டர் பீஸ்’ என்ற மலை­யா­ளப் படத்­தில் நடிக்க வாய்ப்பு கிடைத்­த­தாம்.

“தமிழ்த் திரை­யு­ல­கம் எனக்கு ஆத­ர­வ­ளித்து வளர்த்து ஆளாக்­கி­யுள்­ளது. மலை­யா­ளப் படங்­களில் தொடர்ந்து நடிக்­க­வேண்­டும் என்ற ஆசை இருந்­தா­லும் என்னை முதன்­மு­த­லில் அங்­கீ­க­ரித்து திற­மைக்­கேற்ப வாய்ப்­பு­களை அளித்­து­வ­ரும் தமிழ்த் திரை­யு­ல­கத்­துக்­குத்­தான் அனைத்து வகை­யி­லும் முக்­கி­யத்­து­வம் தரு­வேன்,” என்று சொல்­லும் மகிமா தற்­போது கிருஷ்­ணா­வு­டன் ‘பெல்­பாட்­டம்’ படத்­தில் நடித்து வரு­கி­றார். 

இது கன்­ன­டத்­தில் வெற்றி பெற்ற படத்­தின் தமிழ் மறு­ப­திப்பு. 1980களில் நடக்­கும் காதல் கதை­யாம். அத­னால் அந்­தக் கால­கட்­டத்­தைச் சேர்ந்த உடை­கள், ஒப்­பனை, சிகை அலங்­கா­ரத்­து­டன் திரை­யில் காட்சி தரு­வா­ராம்.

“இது­வரை நான் நடித்த படங்­களில் வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளம் கொண்ட படம் இது. முதன்­மு­றை­யாக கிருஷ்­ணா­வுக்கு ஜோடி­யாக நடிக்­கி­றேன். 

“கன்­ன­டத்­தில் வெளி­யான ‘பெல்­பாட்­டம்’ படத்­தைப் பார்க்­கக் கூடாது என இயக்­கு­நர் உத்­த­ர­விட்­டுள்­ளார். படத்­தைப் பார்த்­தால் அதில் நடித்­த­வர்­க­ளின் பாதிப்பு வந்­து­வி­டும் என்­பது அவ­ரது எண்­ணம். அதற்கு மதிப்­ப­ளித்து நானும் படம் பார்க்­க­வில்லை.”

அண்­மை­யில் மகிமா நடிப்­பில் வெளி­யான ‘அசு­ர­குரு’ படத்­தில் அவர் புகை­பி­டிப்­பது போன்ற காட்சி இடம்­பெற்­றுள்­ளது. 

இதற்கு முன்பு ‘மகா­முனி ‘ படத்­தில் மது அருந்­து­வது போன்ற காட்­சி­யி­லும் நடித்­தி­ருந்­தார். இது­கு­றித்து பல­ரும் கேள்வி எழுப்­பு­கி­றார்­க­ளாம்.

“சினி­மா­வுக்­காக அப்­படி நடித்­தேன். நிஜத்­தில் நான் அப்­ப­டிப்­பட்ட பெண் அல்ல. ஒரு நடிகை தான் ஏற்று நடிக்­கும் கதா­பாத்­தி­ரத்­துக்கு என்ன தேவையோ அதைக் கொடுக்க வேண்­டும். அது ஒரு நடி­கை­யின் கடமை. 

“ஆனால் நிஜத்­தில் நான் மது, சிக­ரெட் பக்­கமே போன­தில்லை. அவற்­றைப் பார்த்­தால் கொரோனா கிரு­மி­யைப் பார்ப்­பது போல் ஓரடி தள்­ளித்­தான் நிற்­பேன்,” என்று சொல்­லும் மகிமா, ஆண்­கள் செய்­யும் அனைத்­தை­யும் செய்­யும் உரிமை பெண்­க­ளுக்­கும் உண்டு என்­கி­றார். 

அந்த வகை­யில் புகை­பி­டிப்­ப­தும் மது அருந்­து­வ­தும் பெண்­க­ளின் தனிப்­பட்ட உரிமை, விருப்­பம் என்­பது மகி­மா­வின் வாதம்.

“பெண்­கள் மது அருந்­தக்­கூ­டாது, புகை­பி­டிக்­கக் கூடாது என்று எந்­தச் சட்­ட­மும் இல்லை. 

“அதே­ச­ம­யம் இந்­தப் பழக்­கங்­க­ளால் பிற­ருக்கு இடை­யூறு ஏற்­ப­டக்­கூ­டாது என்­று­தான் சட்­டம் சொல்­கிறது. அதில் கவ­ன­மாக இருந்­தால் போதும். இந்­தக் கெட்ட பழக்­கங்­கள் ஒரு தனி நபரை மட்­டு­மல்­லா­மல், அவ­ரைச் சார்ந்­துள்ள குடும்­பத்­தை­யும் பாதிக்­கும் என்­பதை சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் உணர வேண்­டும்,” என்று பொறுப்­பு­டன் பேசு­கி­றார் மகிமா.

அண்­மைக்­கா­ல­மாக வாழ்க்கை வர­லாற்­றுப் படங்­கள் அதிக எண்­ணிக்­கை­யில் வெளி­யாகி வரும் நிலை­யில் மகி­மா­வுக்­கும் அப்­ப­டிப்­பட்ட படங்­களில் நடிக்க ஆசை­யாம். 

குறிப்­பாக ஓட்­டப்­பந்­தய வீராங்­கனை பி.டி.உஷா கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க விரும்­பு­கி­றா­ராம்.

“எங்­கள் வீட்­டி­லும் ஒரு பி.டி.உஷா இருந்­தார். அவர் என் அம்மா வித்யா. 

“மாநில அள­வில் பல்­வேறு போட்­டி­களில் பங்­கேற்று பதக்­கங்­க­ளைக் குவித்­தார். நான் பிறந்த பிற­கும்கூட ஓட்­டப் பந்­தய வீராங்­க­னை­யாக இருந்த அவ­ருக்கு நிறைய சாதிக்­க­வேண்­டும் எனும் லட்­சி­யம் இருந்­தது. 

“ஆனால் குடும்­பம் வாரிசு என்று வந்­த­பி­றகு தனது ஆசை­யைக் கைவிட்­டார். 

“அம்­மா­வின் கனவை சினி­மா­வி­லா­வது நிறை­வேற்ற வேண்­டும் என விரும்­பு­கி­றேன்,” என்­கி­றார் மகிமா.