ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகிவரும் 'தலைவி' படம் ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலஞ்சென்ற முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அரவிந்த்சாமி, மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது இப்படம். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி தயாரிக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். விஜயேந்தர பிரசாத் திரைக்கதையில் உருவாகும் இப்படத்தில் சசிகலா வேடத்தில் பூர்ணாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் மதுபாலாவும் நடிக்கின்றனர். இப்படத்தின் சுவரொட்டிகள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஜூன் 26ஆம் தேதி வெளியீடு காண்கிறது 'தலைவி'
1 mins read
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகிவரும் 'தலைவி' படம் ஜூன் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது படம்: ஊடகம் -

