எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கத்தில் சசிகுமார், மடோனா சபாஷ்டியன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் 'கொம்பு வச்ச சிங்கம்டா'. கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குநர் மகேந்திரன், ஸ்ரீபிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 1990களில் தமிழகத்தில் உள்ள சிறு நகரத்தில் நடந்த பரபரப்பான உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. திபு நைனன் தாமஸ் இசை
யமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் பல உணர்வுப்பூர்வ மான காட்சிகள் இருக்குமாம். தொடக்க முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக நகரும் என உறுதியளிக்கிறார் இயக்குநர்.