பிலிப்பீன்சில் மேலும் 414 பேருக்கு கிருமித்தொற்று

பிலிப்பீன்சில் மேலும் 414 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
a00af76e-168c-4fd0-a9cf-6eabc8376615
பிலிப்­பீன்­சில் புதி­தாக 414 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது நேற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. கிரு­மித்­தொற்று பாதிப்­பால் மேலும் 11 பேர் உயி­ரி­ழந்­த­னர். படம்: இபி-இஎஃப்இ -

மணிலா: பிலிப்­பீன்­சில் புதி­தாக 414 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது நேற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. கிரு­மித்­தொற்று பாதிப்­பால் மேலும் 11 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

அந்­நாட்­டில் இது­வரை 3,660 பேரைக் கிருமி தொற்­றி­யுள்­ளது. கிரு­மித்­தொற்­றுக்கு இது­வரை 163 பேர் மர­ண­ம­டைந்­த­னர்.

பிலிப்­பீன்­சில் கொரோனா பாதிப்­பி­லி­ருந்து இது­வரை 73 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், பிலிப்­பீன்­சில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் குறை­யா­த­தால், லுஸோன் தீவு முடக்­க­நிலை நீட்­டிக்­கப்­ப­ட­லாம் எனக் கூறப்­ப­டு­கிறது.