மீண்டும் வந்தார் நிவேதா பெத்துராஜ்

மீண்டும் வந்தார் நிவேதா பெத்துராஜ்

1 mins read
1c5c8694-e05f-4868-b1eb-fee42f4e590e
தனது டுவிட்டர் கணக்கை மூடிய நடிகை நிவேதா பெத்துராஜ் மீண்டும் டுவிட்டரில் தலைகாட்டத் துவங்கி உள்ளார். படம்: டுவிட்டர் -

படப்பிடிப்புகள் ரத்தாகி ஓய்வில் இருப்பதால் திரைத்துறைக் கலைஞர்கள் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை நிவேதா பெத்துராஜ் மீண்டும் டுவிட்டரில் தலைகாட்டத் துவங்கி உள்ளார்.

ஏற்கெனவே அவர் டுவிட்டரில் தனிக்கணக்கு வைத்திருந்த நிலையில், திடீரென அந்தப் பக்கத்தை நீக்கிவிட்டார்.

இந்நிலையில் வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் அவருக்கு பொழுது போகவில்லை. இதனால் மீண்டும் டுவிட்டரில் தனக்கென ஒரு பக்கத்தைத் துவங்கி உள்ளார். இனி ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும்வரை டுவிட்டரில் தீவிரமாக இயங்குவாராம் நிவேதா பெத்துராஜ்.

மிக விரைவில் அவர் மற்ற முன்னணி நாயகிகளைப் போல் சமூக வலைத்தளங்கள் வழி ரசிகர்களுடன் உரையாடுவார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ரசிகர்கள் இப்போதே கேள்விகளைத் தயார் செய்து வருவதாகத் தகவல்.