ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வருகிறது 'பிஸ்கோத்'. இப்படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி தாரா அலிஷா பெர்ரி. இவர் அண்மையில் வெளியான 'ஏ-1' படத்தின் நாயகி. இவர் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இணைந்துள்ளார். மற்றொரு நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகம் ஆகிறார். இவர் 'மிஸ் கர்நாடகா 2017' அழகிப் பட்டம் வென்றவர். இவர்களுடன் சௌகார் ஜானகி, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இது முழுநீள நகைச்சுவை படமாம். வழக்கம் போல் சந்தானம் வயிறு குலுங்க வைப்பாராம்.
இரு நாயகிகளுடன் சந்தானம் ஜோடி சேர்ந்து நடிக்கும் 'பிஸ்கோத்'
1 mins read
தாரா அலிஷா பெர்ரி, சந்தானம். படம்: ஊடகம் -

