இயக்குநரைப் பாராட்டும் கதாநாயகி

இயக்குநரைப் பாராட்டும் கதாநாயகி

1 mins read
94a38cdb-2008-488a-8bf1-0ca1ce136cd7
இதுவரை தாம் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் 'சைக்கோ' படக் கதாபாத்திரம்தான் மிகவும் அழுத்தமானது என்கிறார் அதிதிராவ்.  படம்: ஊடகம் -

இதுவரை தாம் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் 'சைக்கோ' படக் கதாபாத்திரம்தான் மிகவும் அழுத்தமானது என்கிறார் அதிதிராவ்.

மேலும் இயக்குநர் மிஷ்கினின் கதைகள் மிக வலிமையானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் கலந்துரையாடினார் அதிதி. அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்குப் பதிலளிக்கும்போது இயக்குநர் மிஷ்கின் தனித்துவமான பார்வை கொண்டவர் எனப் பாராட்டினார்.

"சைக்கோ'வில் நான் ஏற்று நடித்த தாஹினி கதாபாத்திரம் அருமையாக சித்திரிக்கப்பட்டிருந்தது. மிகப் பயங்கரமாகவும் அதிக அழுத்தமுள்ள கதபாத்திரமாகவும் இருந்தது.

"'சைக்கோ'வில் நடித்தபோது ஒருவித உந்துசக்தியை உணர்ந்தேன். உணர்வுபூர்வமாக நடித்தேன். இயக்குநர் மிஷ்கின் தாம் எதிர்பார்க்கும் நடிப்பை நம்மிடமிருந்து எப்படியும் பெற்றுவிடுவார். அதனால்தான் அவரது பார்வை மட்டுமல்லாமல் படைப்புகளும் தனித்துவமாக உள்ளன," என்றார் அதிதிராவ்.