'பாரிஸ் பாரிஸ்'

'பாரிஸ் பாரிஸ்'

1 mins read
4b9bdc32-e3ae-4ad1-b19a-a5ed0a3b3fbd
'பாரிஸ் பாரிஸ்' படம் மேலும் பல நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என நம்புவதாக நடிகை காஜல் அகர்வாலும் தெரிவித்துள்ளார். படம்: ஊடகம் -

'பாரிஸ் பாரிஸ்' படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார் காஜல் அகர்வால். நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள படம் இது. அமித் திரிவேதி இசையமைத்துள்ள இப்படம் 'குயின்' இந்திப் படத்தின் மறுபதிப்பாகும். இந்தியிலும் இவர்தான் இசையமைத்திருந்தார். "இப்படத்தின் தரத்தைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள அனைவருமே தங்களின் கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான நடிப்பும் கச்சிதமான இயக்கமும் இப்படத்தின் வெற்றிக்கு உதவும் என நம்புகிறேன்," என்று பாராட்டுகிறார் படத்தின் தயாரிப்பாளர் மனுக்குமரன். இந்தப் படம் தமக்கு மேலும் பல நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என நம்புவதாக நடிகை காஜல் அகர்வாலும் தெரிவித்துள்ளார்.