'குடும்பக் கதைகளே தேவை'

'குடும்பக் கதைகளே தேவை'

3 mins read
db4d914c-6c34-4a89-b4a8-09d0732067d2
கேர­ளா­வில் உள்ள கொல்­லம்­தான் இவ­ரது சொந்த ஊர். தந்தை ராஜீவ் ஓய்வு பெற்ற ராணுவ அதி­கா­ரியாம். அம்மா சந்­தி­ர­மதி இல்­லத்­த­ரசி. ஒரே தங்கை அஞ்­ச­லி­தான் தனக்கு நெருக்­க­மான தோழி என்­கி­றார். அனித்ரா ஆங்­கில இலக்­கி­யத்­தில் பட்ட மேற்­ப­டிப்பை முடித்­த­வர். படம்: ஊடகம் -

கேர­ளா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யாகி உள்ள அனித்­ரா­வின் முதல் படம் 'பொல்­லாத உல­கில் பயங்­கர கேம்'. தாய்­மொழி மலை­யா­ள­மாக இருந்­தா­லும் நல்ல தமிழில் அழ­கா­கப் பேசு­கி­றார்.

கேர­ளா­வில் உள்ள கொல்­லம்­தான் இவ­ரது சொந்த ஊர். தந்தை ராஜீவ் ஓய்வு பெற்ற ராணுவ அதி­கா­ரியாம். அம்மா சந்­தி­ர­மதி இல்­லத்­த­ரசி. ஒரே தங்கை அஞ்­ச­லி­தான் தனக்கு நெருக்­க­மான தோழி என்­கி­றார். அனித்ரா ஆங்­கில இலக்­கி­யத்­தில் பட்ட மேற்­ப­டிப்பை முடித்­த­வர்.

"பெண்­கள் என்­றாலே கண்­ணாடி முன் நின்று தங்­கள் அழகை ரசிப்­ப­வர்­கள் என்று சிறு வய­தி­லேயே கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றேன். அடிக்­கடி என் முகத்தை கண்­ணாடி முன் நின்று ரசிப்­பேன். அப்­ப­டிப்­பட்ட ஒரு தரு­ணத்­தில்­தான் ஏன் நாமும் சினி­மா­வில் நடிக்­கக்­கூ­டாது என்ற எண்­ணம் ஏற்­பட்­டது," என்­கி­றார் அனித்ரா.

இவர் சினிமா ஆசை­யில் மூழ்­கிக் கிடக்க, குடும்­பத்­தாரோ அர­சுப் பணிக்­குச் செல்­ல­ வேண்டும் என விரும்­பி­யுள்­ள­னர். எனி­னும் இவர் தனது விருப்­பத்தை வெளிப்­ப­டுத்­தி­ய­போது வீட்­டில் யாரும் அதற்கு முட்­டுக்­கட்டை போட­வில்­லை­யாம். மாறாக உற்­சா­கப்­ப­டுத்தி உள்­ள­னர்.

"மலை­யா­ளத்­தில்­தான் முத­லில் அறி­மு­க­மா­னேன். அந்­தப் படம் விரை­வில் வெளி­யாக உள்­ளது. தமி­ழில் 'பொல்­லாத உல­கில் பயங்­கர கேம்' ­தான் என் முதல் படம். நன்­றா­கத் தமிழ் பேசு­வ­தா­கப் பல­ரும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­கி­றார்­கள்.

"கேர­ளா­வில் இருப்­ப­வர்­க­ளுக்­கு தமிழ் நன்கு பரிச்­ச­ய­மான மொழி­தான். எங்­கள் ஊரில் தமிழ் தொலைக்­காட்சி அலை­வ­ரி­சை­கள் பார்க்­கும் ரசி­கர்­கள்­தான் அதி­கம். ஆரம்­பத்­தில் தமி­ழில் பேசும்­போது அதன் அர்த்­தம் புரி­யா­மல் பதில் அளிக்க சிர­ம­மாக இருக்­கும். ஆனால் போகப்­போக தமிழ் பழ­கி­விட்­டது."

நீங்­கள் அறி­மு­க­மா­கும் முதல் படத்­தி­லேயே பல நாய­கி­கள் இடம்­பெற்­றுள்­ள­னர். இத­னால் உங்­க­ளுக்­கான முக்­கி­யத்­து­வம் குறைந்­து­வி­டாதா என்று கேட்­டால், மாறி­வ­ரும் திரை­யு­ல­கில் இதெல்­லாம் சகஜமா­கி­விட்­டது என்­பதே அனித்­ராவின் பதி­லாக உள்­ளது.

"இது அப்­ப­டிப்­பட்ட கதை. தமி­ழில் நடிக்­க­வேண்­டும் என்­பது எனது நீண்­ட­நாள் ஆசை. எனது திற­மை­யைப் பார்த்து வாய்ப்­ப­ளித்­துள்­ள­னர். எனக்­கா­னது எப்­ப­டிப்­பட்ட கதா­பாத்­தி­ரம் என்­பதை விவ­ரிக்க இய­லாது. எனி­னும் துணிச்­ச­லான வேடம் என்று சொல்­ல­லாம்.

"எனக்கு மற்­ற­வர்­க­ளை­விட முக்­கி­யத்­து­வம் இருப்­ப­தாக நம்­பு­கி­றேன். இதில் என்­னு­டன் சேர்ந்து மொத்­தம் 5 நாய­கி­கள் உள்­ள­னர். ஆனால் நான் படம் முழு­வ­தும் வரு­கி­றேன். அதே­ச­ம­யம் இப்­ப­டத்­தில் உள்ள சிறு கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­கும் உரிய முக்­கி­யத்­து­வம் உள்­ளது," என்­கி­றார் அனித்ரா.

ரேவதி, ஊர்­வசி, ஷோபனா ஆகி­யோர் இவ­ருக்­குப் பிடித்­த­மான நாய­கி­கள். மூவ­ருமே இயல்­பா­க­வும் யதார்த்­த­மா­க­வும் நடிப்­ப­வர்­கள் எனப் பாராட்­டு­கி­றார். அனித்­ரா­வுக்கு ஓர­ளவு பர­த­நாட்­டி­யம் தெரி­யும் என்­ப­தால் ஷோபனாவை கூடு­த­லா­கப் பிடிக்­கு­மாம். கவர்ச்சி வேடங்­களில் நடிப்­ப­தில் ஆர்­வ­மில்லை என்று சொல்­ப­வர் குடும்­பக் கதை­களில் நடிப்­ப­தற்கு முன்­னு­ரிமை அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"ரசி­கர்­கள் என்னை திரை­யில் எப்­படி பார்க்க ­வேண்­டும் என எனக்­குள் கற்­பனை செய்து வைத்­தி­ருக்­கி­றேன். அப்­ப­டித்­தான் நடிப்­பேன்.

"குடும்­பப் பாங்­கான நடி­கை­யாக ரசி­கர்­கள் என்­னைத் திரை­யில் கண்டு ரசிக்­க­ வேண்­டும் என்ற கொள்­கையை விடா­மல் கடைப்­பி­டிப்­பேன்," என்று சொல்­லும் அனித்ரா, மொட்டை ராஜேந்தி­ரன் நகைச்­சு­வைக்­கு தீவிர ரசிகையாம். படப்­பி­டிப்­பின்­போது முதன்­மு­றையாக அவரை நேரில் சந்­தித்­ததை மறக்­க இய­லாது என்கி­றார்.

"படப்­பி­டிப்­பின்­போது அவர் சூழ்­நி­லைக்கு ஏற்ப சில கூடு­தல் வச­னங்­க­ளைப் பேசி சிரிக்க வைப்­பார். அவ­ரு­டன் முதல் படத்­தி­லேயே இணைந்து நடித்­தது மகிழ்ச்சி தரு­கிறது," என்று சொல்­லும் அனித்ரா தாம் மிக­வும் மென்மை­யான பெண் என்­றும் ஜாலி­யாக இருக்க விரும்­பும் பெண் என்­றும் கூறு­கி­றார்.

"அதே­ச­ம­யம் அதி­கம் பேசி அரட்டை அடிக்க மாட்­டா­ராம். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்­பா­ராம்.

"தேவை­யில்­லாத விஷ­யங்­களில் மூக்கை நுழைக்­க­மாட்­டேன். இது­வரை காதல் அனு­ப­வம் ஏது­மில்லை. பள்­ளி­யில் படித்­த­போது எனக்­கும் சம வய­துள்­ள­வர்­கள் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. ஒன்­றி­ரண்டு பேர் எனக்­கு காதல் கடி­த­மும் கொடுத்­துள்­ள­னர். ஆனால் அது காதல் அல்ல," என்று சொல்­ப­வ­ருக்­கு சமூக வலைத்­த­ளங்­களில் ஆர்­வ­ம் இல்­லை­யாம்.

மாறாக கைவி­னைப் பொருட்­கள் செய்­வது உள்­ளிட்ட கலைத்­து­வ­மான, கவித்­து­வ­மான விஷ­யங்­களில் கவ­னம் செலுத்­து­வ­தா­கச் சொல்­கி­றார் அனித்ரா.