வருத்தத்துடன் விலகும் அபிராமி

1 mins read
e25dd8a3-6fac-42b6-a197-db32c92d0b8d
போலிகளை உண்மையென்று நம்பி ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி தவறாக விமர்சிப்பதாகக் கூறியுள்ளார் பிக்பாஸ் புகழ் அபிராமி. படம்: ஊடகம் -

போலிகளை நிஜமென்று நம்பி ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி தவறாக விமர்சிப்பதாகக் கூறியுள்ளார் பிக்பாஸ் புகழ் அபிராமி.

இவ்வாறு விமர்சிப்பவர்களை நினைத்து நாம் அதிசயிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

டுவிட்டர் தளத்தைத் அடுத்து டிக்டாக் தளத்திலும் இவரது பெயரில் போலிக்கணக்குகள் இயங்குகின்றனவாம். இதனால் தாம் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் டிக்டாக் தளத்திலிருந்து வெளியேற முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

"போதும் இந்த அசிங்கம். இங்கிருந்தும் விரைவில் வெளியேறி விடுவேன். அனைவரிடம் இருந்தும் நிறைய அனுபவித்து விட்டேன்.

"போலிகளை நிஜம் என்று நம்பி நம்மைத் தாக்கும் இந்தப் பொதுமக்களை நினைத்து அதிசயிக்கிறேன். டுவிட்டர் போலிக் கணக்குகளைப் போல் டிக்டாக்கிலும் போலிக்கணக்குகள் பிரச்சினை தருகின்றன," என்று தமது இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார் அபிராமி.