நிதி திரட்டும் ரகுல் பிரீத்­சிங்­

3 mins read
b45f4b3f-2f56-400b-855f-9ce3baac07e4
நடிகை ரகுல் பிரீத்­சிங்­கும் யூடி­யூப் சேனல் துவங்­கி­யுள்­ளார். இதன் மூலம் கணி­ச­மான அள­வில் நிதி திரட்டி ஆத­ர­வற்­ற­வர்­க­ளுக்கு உதவ நினைக்­கி­றா­ராம். மேலும் பிர­த­மர் நிவா­ரண நிதிக்­குக் கணி­ச­மான தொகை வழங்­க­வும் திட்­ட­மிட்­டுள்­ளார்.  படம்: ஊடகம் -

கொரோனா கிரு­மித் தொற்று இனம், மதம், சாதி என அனைத்­தை­யும் கடந்து மக்­களை இணைத்­துள்­ளது. சக மனி­த­ருக்கு உத­வ­வேண்­டும் எனும் எண்­ணம் வலுத்து வரு­கிறது.

அந்த வகை­யில் திரைக்­க­லை­ஞர்­கள் பல­ரும் தங்­க­ளால் இயன்ற அளவு சக கலை­ஞர்­க­ளுக்கு மட்­டு­மல்­லா­மல் பொது­மக்­க­ளுக்­கும் உதவி வரு­கின்­ற­னர்.

ஹன்­சி­கா­வைத் தொடர்ந்து நடிகை ரகுல் பிரீத்­சிங்­கும் யூடி­யூப் சேனல் துவங்­கி­யுள்­ளார். இதன் மூலம் கணி­ச­மான அள­வில் நிதி திரட்டி ஆத­ர­வற்­ற­வர்­க­ளுக்கு உதவ நினைக்­கி­றா­ராம். மேலும் பிர­த­மர் நிவா­ரண நிதிக்­குக் கணி­ச­மான தொகை வழங்­க­வும் திட்­ட­மிட்­டுள்­ளார்.

அண்­மை­யில் நடிகை ஹன்­சிகா யூடி­யூப் தளத்­தில் இயங்க முடிவு செய்­தி­ருப்­ப­தாக அறி­வித்­தார். இதன்­மூ­லம் தனது வாழ்க்கை பற்றி ரசி­கர்­கள் இன்­னும் விரி­வா­கத் தெரிந்­து­கொள்ள முடி­யும் என்­றும் அத்­த­கைய ஆர்­வம் இருப்­ப­வர்­கள் தனது சேன­லில் உறுப்­பி­ன­ரா­க­லாம் என்­றும் அவர் தெரி­வித்­தி­ருந்­தார்.

பொது­வாக நடி­கை­கள் யூடி­யூப் சேனல் துவங்­கு­வ­தில்லை. ஆனால் தற்­போது நிலைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது. படப்­பி­டிப்­பில்­லா­மல் வீட்­டி­லேயே தங்­கி­யி­ருப்­ப­தால் தங்­கள் நடிப்­புப் பசிக்­குத் தீனி போட யூடி­யூப் தளத்தை நாடி­யுள்­ள­னர் நடி­கை­கள்.

இதி­லும் பிற­ரது உதவி கிடைக்க வாய்ப்­பில்லை என்­ப­தால் தனித்தே இயங்க முடிவு செய்­துள்­ள­னர். அந்த வகை­யில் ஹன்­சி­கா­வைத் தொடர்ந்து ரகுல் பிரீத்­சிங் புதிய சேனல் துவங்­கி­யுள்­ளார்.

தொடக்­கத்­தில் அவர் சில விழிப்­பு­ணர்வு தக­வல்­க­ளைப் பகிர்ந்து கொள்­வா­ராம். அதன்­பின்­னர் ரசி­கர்­களை மகிழ்­விக்­கும் வகை­யில் சிறு காணொ­ளிப் பதி­வு­களை வெளி­யி­டு­வா­ராம். நகைச்­சு­வை­யா­க­வும் இளமை ததும்­பும் வகை­யி­லும் அந்­தப் பதி­வு­கள் இருக்­கும் எனத் தக­வல். அதே­போல் நாட்டு நடப்­பு­கள் உல­க­ள­வி­லான சுவா­ர­சி­ய­மான விஷ­யங்­கள், கலை, திரை­யு­ல­கம் சார்ந்த சங்­க­தி­க­ளு­டன் அவர் ரசி­கர்­க­ளைச் சந்­திக்க உள்­ளார்.

"ஒரு நல்ல செய­லுக்­காக நாம் அனை­வ­ரும் இணைந்து செய­லாற்­று­வோம். எனது புதிய முயற்சி மூலம் கிடைக்­கும் தொகையை மக்­க­ளுக்கு உதவ பயன்­ப­டுத்­து­வேன். எனவே, இந்த முயற்­சிக்கு அனை­வ­ரும் ஒத்­து­ழைக்க வேண்­டு­மென கேட்­டுக் கொள்­கி­றேன்," என ரகுல் பிரீத்­சிங் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார். இவ­ரைப் போல் மேலும் சில முன்­னணி நடி­கை­கள் யூடி­யூப் தளத்­தில் இயங்க முடிவு செய்­தி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது.

ஊர­டங்கு உத்­த­ர­வின்­போது நடிகை சாக்‌ஷி அகர்­வால் சமூக வலைத்­த­ளம் மூலம் ரசி­கர்­க­ளு­டன் அவ்­வப்­போது கலந்­து­ரை­யாடி வரு­கி­றார். மேலும் சில காணொ­ளிப் பதி­வு­க­ளை­யும் வெளி­யி­டு­கி­றார்.

அவர் உடற்­ப­யிற்சி செய்­வது குறித்­தும் அத­னால் விளை­யும் நன்­மை­கள் குறித்­தும்­தான் அதி­கம் பேசு­கி­றார். ரசி­கர்­க­ளுக்­கும் அது­தான் பிடித்­தி­ருக்­கி­ற­தாம்.

"உடற்­ப­யிற்சி செய்­வ­தால் நீண்ட ஆயு­ளு­டன் ஆரோக்­கி­ய­மாக வாழ­லாம். அத­னால்­தான் உடற்­பயிற்சி செய்­யு­மாறு தொடர்ந்து கூறி வரு­கி­றேன். அதி­லும் தினந்­தோ­றும் உடற்­ப­யி­ற்சி செய்­வதுபோல் நல்ல விஷ­யம் இருக்கமுடி­யாது.

"நான் எத்­தனை வேலை­கள் இருந்­தா­லும் உடற்­ப­யிற்சி செய்­யத் தவ­று­வ­தில்லை. எனவே, எனது ரசி­கர்­களும் என்­னைப் பார்த்து தின­மும் உடற்­பயிற்சி செய்ய தங்­க­ளைத் தயார்­ப்ப­டுத்­திக் கொள்ளவேண்­டும்," என்­கி­றார் சாக்‌ஷி அகர்­வால்.

நடிகர் சங்க உறுப்பினர்களுக்காக 1,250 கிலோ அரிசியை வழங்கியுள்ளார் யோகிபாபு. குறைந்த வருமானமுள்ள நடிகர்கள், நாடக நடிகர்களுக்கு, முன்னணி நடிகர்கள் தங்களால் இயன்றதைச் செய்யவேண்டும் என நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று யோகிபாபு உதவிக்கரம் நீட்டியுள்ளார். நடிகர் சூரியும் 25 கிலோ எடை கொண்ட 100 அரிசி மூட்டைகளை திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கும் 500 கிலோ அரிசியை துணை நடிகர்கள் சங்கத்திற்கும் அளித்துள்ளார்.