‘மாஸ்டர்’ பாடல்: சேதுபதி ரசிகர்கள் உற்சாகம்

‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போனாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வப்போது ஏதேனும் அறிவிப்பை அப்படக்குழவினர் வெளியிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் அப்படத்துக்காக அனிருத் இசையில், சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள ‘பொளக்கட்டும் பறபற’ பாடல் வரிகளுடன் வெளியாகியுள்ள காணொளி  பலத்த வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. 

இப்படத்தில் விஜய்யுடன் மோதும் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரம் என்பதால் சேதுபதிக்கும் ஒரு பாடல் அமைக்கப்பட்டுள்ளது. 

‘பொளக்கட்டும் பறபற’ என்ற அந்தப் பாடலின் வரிகளை ரசிகர்கள் பரவலாகப்  பகிர்ந்து வருகின்றனர். 

‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. அதற்கு முன்பாகவே 3 பாடல்கள் வெளியாகி இருந்தன. விழாவில் வெளியிடப்பட்ட பாடல்களைத் தவிர மேலும் இரண்டு பாடல்கள் இருப்பதாக அனிருத் தெரிவித்திருந்தார். 

அவையும் விரைவில் வெளியாகும் என்று அவர் கூறியிருந்த நிலையில் ரசிகர்களுக்கு ‘மாஸ்டர்’ படக்குழு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

‘பொளக்கட்டும் பறபற’ பாடலின் காணொளியை சேதுபதியின் ரசிகர்கள் மட்டுமல்லாது விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். 

விஜய்யின் 64ஆவது படமான ‘மாஸ்டர்’ வெளியீடு கொரோனா கிருமிப் பிரச்சினையால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் இடம்பெறும், விஜய் பாடிய ‘குட்டி ஸ்டோரி’ காதலர் தினத்தன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 

இதையடுத்து ‘வாத்தி கம்மிங்’, ‘வாத்தி ரெய்டு’ என அடுத்தடுத்து வெளியான  பாடல்களும் பிரபலமாகியுள்ளன.

இந்நிலையில் படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon