சவால் விடுக்கும் நடிகைகள்

1 mins read
dda6dc9f-2503-4134-b846-d2ba5bfbe661
ரகுல் பிரீத் சிங். படம்: ஊடகம் -

படப்பிடிப்பு இல்லாத நிலையில் வீட்டில் முடங்கி உள்ள நடிகைகள் சமூக வலைத்தளங்களில் காணொளி மூலம் சவால் விட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ரகுல் பிரீத் சிங் விடுத்துள்ள சவால் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

உடற்பயிற்சி செய்வது என்றால் இவருக்கு மிகுந்த விருப்பம். இந்நிலையில் கவர்ச்சியாக உடை அணிந்து தலைகீழாய் நின்றபடி உடற்பயிற்சி செய்து, ஒரு டி-சட்டையை அணிகிறார் ரகுல்.

இந்தக் காணொளியைப் பதிவிட்டு, 'மற்றவர்கள் இதுபோல் செய்ய முடியுமா?' என்று ரகுல் விடுத்த சவாலை உடனடியாக ஏற்றுக்கொண்டார் நடிகை சஞ்சனா சிங்.

சூட்டோடு சூடாக அவரும் தலைகீழாய் நின்று உடற்பயிற்சி செய்தபடி டி-சட்டையை அணியும் காட்சியைக் காணொளியாக வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த இரு காணொளிப் பதிவுகளையும் ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.