ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் அவதிப்படும் நடிகர்களுக்கு மளிகை சாமான்கள் வழங்கி உதவியுள்ளார் நடிகர் விஷால்.
தற்போது எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள், துணை நடிகர்கள், நாடக நடிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களுக்கு பிரபல நடிகர்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் சென்னையைச் சேர்ந்த சுமார் 1,500 பேருக்கு ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்கள் கொடுத்து உதவி செய்துள்ளார் விஷால்.
இந்த மளிகைப் பொருட்களை நடிகர் ஸ்ரீமன், தளபதி தினேஷ் இருவரும் வழங்கினார்கள். வெளியூரில் உள்ள உறுப்பினர்களுக்கு இந்த மாதிரியான மளிகைப் பொருட்களைக் கொடுக்க விஷால் தரப்பு ஏற்பாடு செய்து வருகிறது.
"300 திருநங்கைகளுக்கும் மளிகைச் சாமான்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
"ஆயிரம் கையுறைகள் முகக்கவசங்கள் ஆகியவை துப்புரவுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன," என்று விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி தெரிவித்துள்ளார்.

