விவேக்: எதிர்மறைப் பதிவுகளைத் தவிர்க்கவும்

விவேக்: எதிர்மறைப் பதிவுகளைத் தவிர்க்கவும்

1 mins read
6054d33c-676b-4b15-8930-348ea665d285
படப்பிடிப்பின்போது அஜீத்துடன் விஜய். -

அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்ணியம் காக்கவேண்டும் என்று நடிகர் விவேக் அறிவுறுத்தி உள்ளார்.

அண்மைய சில தினங்களாக இருவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பதிவுகள் மற்றவர்களை முகம் சுழிக்கவைக்கும் வகையில் உள்ளன.

கொரோனா கிருமித் தாக்கத்தால் திரையுலகினர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அஜித், விஜய், போன்ற முன்னணி நடிகர்கள் பெரிய அளவில் தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் 1.25 கோடி ரூபாய் நிதியை அறிவித்துள்ளார் அஜித். இதையடுத்தே 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் விஜய் 10 கோடி ரூபாயையாவது நிதியாக வழங்குவாரா? என்று அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு விஜய் ரசி-கர்-கள் பதி-லடி தந்-த-னர். இதை-ய-டுத்து இரு-த-ரப்-புக்-கும் இடை-யே-யான வார்த்-தைப் போர் மோச-மான நிலையை எட்-டி-யுள்-ளது.

இது-கு-றித்து டுவிட்-ட-ரில் பதி-விட்-டுள்ள நடி-கர் விவேக், தன் நண்-பர்-கள் அஜித், விஜய் உள்-ளிட்ட எந்த நடி-க-ரை-யும் தனி மனிதரையும் தரம் தாழ்த்தி செய்-யப்-படும் எதிர்-ம-றைப் பதி-வு-க-ளைத் தாம் விரும்-பு-வ-தில்லை எனக் கூறி-யுள்-ளார்.

இத்-த-கைய பதி-வு-களை வெளி-யி-டும்-போது அவற்-று-டன் தமது பெய-ரை-யும் இணைக்க வேண்-டா-மென அவர் கேட்-டுக் கொண்-டுள்-ளார்.

எப்போதுமே நேர்-ம-றைப் பதி-வு-க-ளுக்-காக மட்-டுமே தாம் சமூக வலைத்-த-ளங்-க-ளைப் பயன்-ப-டுத்-து-வ-தா-கக் குறிப்-பிட்-டுள்ள அவர், ஊர-டங்கு வேளை-யில் பொதுமக்கள் அனை-வ-ரும் வீட்-டி-லேயே பாது-காப்-பாக இருக்-கு-மாறு கேட்-டுக்-கொண்-டுள்-ளார்.