ஊரடங்கால் ரூ.8 லட்சம் கோடி இழப்பு: ஆய்வில் தகவல்

ஊரடங்கால் ரூ.8 லட்சம் கோடி இழப்பு: ஆய்வில் தகவல்

2 mins read
31dfedad-6c8a-478a-b2a5-dd61e6a0436a
அகமதாபாத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற ஏராளமான முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: ஊர­டங்கு உத்­த­ரவு கார­ண­மாக சுமார் 8 லட்­சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

நாடு முழு­வ­தும் கடந்த 25ஆம் தேதி முதல் 21 நாள் ஊர­டங்கு உத்­த­ரவு அமல்­ப­டுத்­தப்­படும் என பிர­த­மர் மோடி அறி­வித்­தார்.

இதை­ய­டுத்து அனைத்து மாநி­லங்­க­ளி­லும் பெரும்­பா­லான தொழிற்­சா­லை­கள், வர்த்­தக நிறு­வ­னங்­கள், உண­வ­கங்­கள், சிறு கடை­கள் என அனைத்­தும் அடைக்­கப்­பட்­டுள்­ளன. போக்­கு­வ­ரத்­தும் முடங்­கி­யுள்­ளது.

இத­னால் நாட்­டில் 70 விழுக்­காடு பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­கள் முடங்­கிப் போயின. ஏற்­று­மதி, இறக்­கு­மதி ஆகி­ய­வை­யும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லை­யில் 21 நாள் நீடித்த ஊர­டங்­கால் இந்­தி­யா­வின் பொரு­ளா­தா­ரம் பலத்த அடி­யைச் சந்­தித்­துள்­ளது என்­றும், சுமார் 8 லட்­சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்­பட்­டி­ருக்­கும் என்­றும் அக்­யூட் மதிப்­பீடு மற்­றும் ஆய்வு நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக ஏப்­ரல் மாதத் துவக்­கத்­தில் இந்­நி­று­வ­னம் ஆய்வு மேற்­கொண்­டது. இதில் நாடு முழு­வ­தும் ஒவ்­வொரு நாளும் 35 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­வுக்­குப் பொரு­ளா­தார இழப்பு ஏற்­ப­டு­வது தெரி­ய­வந்­துள்­ளது.

ஊர­டங்கு உத்­த­ர­வால் போக்­கு­வ­ரத்­துத் துறை, சுற்­று­லாத் துறை, கட்­டு­மா­னத் தொழில் மற்­றும் சிறு தொழில்­களை நம்பி இருப்­போர்­தான் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே இந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்­சி­யா­னது 2020-21ஆம் நிதி­யாண்­டில் 1.5 முதல் 2.8 விழுக்­காடு அள­வில் இருக்­கும் என்று உலக வங்கி அறி­வித்­துள்­ளது. கடந்த 1991ஆம் ஆண்டு இந்­தி­யா­வில் பொரு­ளா­தார சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

அதன்­பி­றகு நடப்பு நிதி­யாண்­டில்­தான் ஆகக் குறைந்த பொரு­ளா­தார வளர்ச்சி விகி­தம் பதி­வா­கும் என பொரு­ளி­யல் நிபு­ணர்­கள் கணித்­துள்­ள­னர்.