புதிய அவதாரம் எடுக்கும் யோகி பாபு

புதிய அவதாரம் எடுக்கும் யோகி பாபு

1 mins read
c36de61c-e125-43bd-af01-ecf0207e0495
எஸ்.பி.சௌத்ரி அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்திற்காக யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதப்போகிறார். படம்: இணையம் -

இப்போது கோடம்பாக்கத்தில் அதிக படங்களில் நடித்துக்கொண்டிருப்பது யோகி பாபுதான். நகைச்சுவை கதாபாத்திரங்கள் போக, நாயகனாகவும் நடிக்கிறார்.

இந்நிலையில் கதாசிரியராக அவதாரம் எடுக்கப் போகிறாராம். அதற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

'டகால்டி' படத்தை தயாரித்த எஸ்.பி.சௌத்ரி அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்திற்காக யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதப்போகிறார்.

இந்தப் படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதால் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறாராம் யோகி.

'கோலமாவு கோகிலா' படத்தில் இவரும் நயன்தாராவும் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெரிதாகப் பேசப்பட்டன. அப்போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் யோகி பாபுவே அவரிடம் நேரடியாகப் பேசி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால் அடுத்த ஆண்டு இறுதிவரை நயன்தாராவால் கால்ஷீட் ஒதுக்குவது ரொம்பக் கடினம் என அவரது தரப்பில் கூறப்படுவதாகத் தகவல்.

இருப்பினும், யோகிபாபு தரப்பு முயற்சியைக் கைவிடவில்லை.

ஒருவேளை நயன் ஒப்பந்தமாகா விட்டால் காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். 'கோமாளி'யில் அவருடன் இணைந்து நடித்துள்ளார் யோகி.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் நயனைவிட இந்தப் படத்தில் காஜல் நடிக்கவே அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்