விவேக் போன்று ஒரு நகைச்சுவை, குணசித்திர நடிகரைப் பார்க்கமுடியாது என்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.
அவரிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹரிஷ் கல்யாண், நிவேதா இணைந்து நடித்த 'தாராளபிரபு' படத்தில் விவேக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
"விவேக் சாரை வெவ்வேறு கதாபாத்திரங்களில் நாம் பார்த்திருக்கிறோம். நகைச்சுவை நடிகர் என்று கூறப்பட்டாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பிரகாசித்தவர் அவர். 'தாராளபிரபு'வில் அவர் அனைவரது நடிப்பையும் வென்றுவிட்டார். நகைச்சுவை, உணர்வுபூர்வமான பகுதிகள் என அனைத்திலும் அவரது பங்களிப்பு அசரவைக்கிறது. உங்களிடமிருந்து நிறைய கற்கவேண்டி உள்ளது சார்," என்று குறிப்பிட்டுள்ளார் நிவேதா.

