மிகவும் கடினமான காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் அனைத்து வகையிலும் உதவியாக இருக்க வேண்டும் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிப் படங்களில் நடித்துவரும் இவர், தற்போது கொரோனா கிருமித்தொற்று தொடர்பாக பதிவிட்டுள்ளார்.
அதில் அனைவரும் தன்னலம் கருதாமல் சமூகத்தின், நாட்டின் எதிர்காலத்தை மனதிற்கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
"தன்னலமில்லாமல் சேவையாற்றி வரும் மருத்துவ, சுகாதார பணியாளர்கள் காவல்துறை அண்ணன்கள், அக்காள்களுக்கு என்றைக்கும் கடமைப்பட்டு உள்ளோம்," என்று கூறியுள்ளார் சாய் பல்லவி. மேலும் ஏழை, எளியவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

