ஜாலியாகப் பதிலளித்த ரைசா

ஜாலியாகப் பதிலளித்த ரைசா

1 mins read
8f6dd003-87de-47b2-b4e3-76a48d15024d
தற்போது தமிழில் இரண்டு புதுப்படங்களில் நடித்து வருகிறாராம் ரைசா வில்சன். படம்: ஊடகம் -

நடிகர் ஹரீஷ் கல்யாணை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று ரசிகர் எழுப்பிய கேள்விக்கு நடிகை ரைசா வில்சன் அளித்த பதில் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இவர்கள் இருவரும் 'பியார் பிரேமா காதல்' என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் ரைசா. எப்போதும் ரசிகர்களின் கேள்விக்கு ஜாலியாக பதிலளிக்கக் கூடியவர் ரைசா.

அண்மைய கலந்துரையாடலில் ரசிகர் ஒருவர், "ஹரீஷ் அண்ணாவும் நீங்களும் திருமணம் செய்து கொள்வீர்களா?" என்று கேட்க, அதற்கு ரைசா, "ஆமாம். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். ஆனால் இதை அவரிடம் சொல்லி விடாதீர்கள். அவருக்கு இது ஆச்சரியமான தகவலாக இருக்கட்டும்," என வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.

தற்போது தமிழில் இரண்டு புதுப்படங்களில் நடித்து வருகிறாராம் ரைசா வில்சன்.