முகத்தோற்றம் மாறிவிட்டதாகப் புலம்பும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

1 mins read
9cb72e3e-aeb7-46b2-a2e4-f3d725a13d75
ஊர­டங்கு உத்­த­ர­வால் அழகு நிலை­யங்­க­ளுக்­குச் செல்ல முடி­யாத கார­ணத்­தால் தனது முகத்­தோற்­றம் சற்றே மாறி­விட்­ட­தா­கத் தெரி­வித்­துள்­ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். படம்: ஊடகம் -

ஊர­டங்கு உத்­த­ர­வால் அழகு நிலை­யங்­க­ளுக்­குச் செல்ல முடி­யாத கார­ணத்­தால் தனது முகத்­தோற்­றம் சற்றே மாறி­விட்­ட­தா­கத் தெரி­வித்­துள்­ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இது தொடர்­பாக அவர் இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

வழக்­க­மாக அவ்­வப்­போது அழகு நிலை­யம் சென்று முக அழ­கைப் பரா­ம­ரித்து வரு­வா­ராம்.

தற்­போது அழகு நிலை­யம் செல்ல முடி­யாத நிலை­யில் அங்கு பணி­யாற்­றும் ஊழி­யர்­க­ளா­லும் தன் வீட்­டுக்கு வர­மு­டி­ய­வில்லை என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இத­னால் என் புருவ முடி­கள் வேக­மாக வளர்ந்து அதன் அமைப்பு தடித்­து­விட்­டது. இத­னால் எனது முகத்­தோற்­றம் மாறி­யுள்­ளது. இது கவலை அளிக்­கிறது.

"இந்த மாற்­றம் கார­ண­மாக நான் ஏற்று நடிக்­கும் கதா­பாத்­தி­ரங்­களில் தோற்­ற­மும் மாறக்­கூ­டும்.

இந்­தக் கார­ணத்­துக்­காக தயா­ரிப்­பா­ளர்­க­ளி­டம் நான் மன்­னிப்­புக் கேட்­டுக் கொள்­கி­றேன்," என்று ஷ்ரத்தா தமது சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் கவ­லை­யைப் பகிர்ந்து கொண்­டுள்­ளார்.