விஜய்யை தொடர்புகொண்ட அஜித்

1 mins read
a3d27bf7-21f6-4194-853c-75e57de14d64
நடிகர் விஜய்யின் மகன் கனடாவில் மேற்கல்வி பயின்று வரும் நிலையில் கொரோனா கிருவி விவகாரம் காரணமாக அவரால் ஊர் திரும்ப முடியவில்லை. இதனால் விஜய் மிகுந்த கவலையில் இருப்பதாகவும் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகனுடன் பேசி வருவதாகவும் தகவல் வெளியானது. படம்: ஊடகம் -

நடிகர் விஜய்யின் மகன் கனடாவில் மேற்கல்வி பயின்று வரும் நிலையில் கொரோனா கிருவி விவகாரம் காரணமாக அவரால் ஊர் திரும்ப முடியவில்லை. இதனால் விஜய் மிகுந்த கவலையில் இருப்பதாகவும் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு மகனுடன் பேசி வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் சில ஊடகங்கள், 'பரபரப்புக்காக கண்ணீர் விட்ட விஜய்', 'கதறி அழுத விஜய்' என கற்பனை கலந்த தலைப்புகளுடன் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் விஜய் மகன் சஞ்சய் குறித்து அவரிடம் நடிகர் அஜித் நலம் விசாரித்துள்ளார். அப்போது தனது மகன் பாதுகாப்பாக இருப்பதாகவும் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் விஜய் கூறினாராம். இதனால் விஜய் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்று தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.