விவேக்: ரசம், முகக்கவசம் இரண்டும் தேவை

விவேக்: ரசம், முகக்கவசம் இரண்டும் தேவை

1 mins read
f55fb9f3-fe55-403e-8803-f9c4900d2bca
மற்ற நாடு­க­ளோடு ஒப்­பி­டு­கை­யில் 130 கோடி மக்­கள் தொகை­யுள்ள இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு மிக­வும் குறை­வா­னது என நடி­கர் விவேக் தெரி­வித்­துள்­ளார். படம்: ஊடகம் -

மற்ற நாடு­க­ளோடு ஒப்­பி­டு­கை­யில் 130 கோடி மக்­கள் தொகை­யுள்ள இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு மிக­வும் குறை­வா­னது என நடி­கர் விவேக் தெரி­வித்­துள்­ளார்.

ஊர­டங்­கைக் கடைப்­பி­டித்­த­து­தான் இதற்­குக் கார­ணம் என அவர் காணொ­ளிப் பதிவு ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"அரசு சொன்­ன­படி நாம் ஓர­ள­வுக்கு நடந்­தி­ருக்­கி­றோம் என்­ப­து­தான் இந்­தக் குறை­வான தொற்று அளவு காட்­டு­கிறது. இதை இன்­னும் குறைத்து நாம் முழு­மை­யாக இதி­லி­ருந்து வெளியே வர வேண்­டும். இதற்கு என்ன செய்ய வேண்­டும் என்­றால், அடுத்து வரும் நாட்­கள் கண்­டிப்­பாக முகக் கவ­சம் அணிய வேண்­டும்.

"வாய், மூக்கு இரண்­டை­யும் மறைப்­பது போன்ற முகக் கவ­சம் அணிய வேண்­டும். கண் குறித்து கண் மருத்­து­வ­ரி­டம் கேட்ட போது, அதன் மூலம் பெரிய ஆபத்து இல்லை என்று சொன்­னார்­கள். வாய், மூக்கு இரண்­டுமே கண்­டிப்­பாக முகக் கவ­சத்­தால் மூடி­யி­ருக்க வேண்­டும்," என விவேக் அறி­வு­றுத்தியுள்­ளார்.

மக்கள் அனைவருமே வீட்டை விட்டு வெளியே சென்றால், கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் இரண்டு 'சம்' ரொம்ப முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

"அதாவது, சாப்பாட்டுக்கு மிளகு ரசம், முகத்துக்கு முகக் கவசம். இரண்டு 'சம்'களும் இருந்தால் வாழ்க்கை ஆசம் (Awesome). முகக் கவசத்தை கண்டிப்பாக அணியுங்கள்," என்று தமது விழிப்புணர்வுக் காணொளியில் விவேக் மேலும் தெரிவித்துள்ளார்.