நீடிக்கிறது 'ஹீரோ' பட கதை விவகாரம்

2 mins read
6a3cc9a2-b22a-4fdc-8da3-cbff8128a3d1
'ஹீரோ' படத்தின் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயன். -

மித்­ரன் இயக்­கத்­தில் சிவ­கார்த்­தி­கே­யன் நடிப்­பில் வெளி­யான 'ஹீரோ' படம் பெரிய அள­வில் வெற்றி பெற­வில்லை.

எனி­னும் இப்­ப­டத்­தின் செயற்­கைக்­கோள் மற்­றும் பிற­மொழி பதிப்­பு­க­ளின் உரிமை பல கோடி­க­ளுக்கு விலை போயி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் இப்­ப­டத்­தின் கதை தனக்­குச் சொந்­த­மா­னது என இயக்­கு­நர் போஸ்கோ பிரபு என்­ப­வர் வழக்­கு தொடுத்­தி­ருந்­தார். இந்த வழக்­கில் இறு­தித்­தீர்ப்பு வெளி­யா­க­வில்லை.

எனி­னும் கடந்த மாதம் சென்னை உயர்­நீ­தி­மன்­றம் இப்­ப­டத்தை வேறு மொழி­களில் வெளி­யி­ட­வும் படத்­தின் மொழி­மாற்­றம், செயற்­கைக்­கோள் உரி­மை­க­ளுக்­கும் இடைக்­கா­லத்­தடை விதித்­தும் உத்­த­ர­விட்­டது.

எனி­னும் தடையை மீறி தெலுங்­கில் 'சக்தி' என்ற புதிய தலைப்­பில் மொழி­மாற்­றம் செய்து இப்­ப­டம் கடந்த மார்ச் 20ஆம் தேதி வெளி­யாக இருந்­தது. ஊர­டங்கு உத்­த­ர­வால் இது சாத்­தி­ய­மா­க­வில்லை.

இந்­நி­லை­யில் தனி­யார் இணைய­த­ளத்­தில் இப்­ப­டம் வெளி­யா­கும் என அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது. இதை­ய­டுத்து அந்­நி­று­வ­னத்­தை தொடர்­பு­கொண்டு நீதி­மன்­றம் பிறப்­பித்த உத்­த­ர­வை தெரி­யப்­ப­டுத்தி உள்­ளார் போஸ்கோ பிரபு.

இதனால் தங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த 'ஹீரோ'வின் தெலுங்குப் பதிப்பை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

"நீதிமன்ற உத்தரவு குறித்து அத்தனியார் நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தினேன். மேலும் உத்தரவின் நகலையும் அனுப்பினேன். இதையடுத்தே இணையதளத்தில் இருந்து 'சக்தி' திரைப்படத்தை நீக்கி உள்ளனர். விரைவில் நீதிமன்றத்திலிருந்து நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்," என்கிறார் போஸ்கோ பிரபு.

இதற்கிடையே 'ஹீரோ' கதை இவருக்கு சொந்தமானது என தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கம் முடிவுக்கு வந்திருப்பதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.