'காக்கா முட்டை' என்ற தனது முதல் படத்திலேயே தேசிய விருதை சொந்தமாக்கிய இயக்குநர் மணிகண்டன், அடுத்தடுத்து 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது மணிகண்டன் இயக்கியிருக்கும் படம் 'கடைசி விவசாயி'. இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்துள்ளார். நல்லாண்டி என்பவர் விவசாயி கதாபாத்திரத்திலும், யோகி பாபு
யானைப் பாகனாகவும் இப்படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விவசாயிகளின் பிரச்சினைகளை அலசுகிறது இப்படம். வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படத்தின் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.

