மன­ந­லம் என்­ப­து­தான் தற்­போது அதி­கம் கவ­னிக்­கப்­ப­டாத பிரச்­சி­னை­யாக உருவெடுத்துள்ளது

மன­ந­லம் என்­ப­து­தான் தற்­போது அதி­கம் கவ­னிக்­கப்­ப­டாத பிரச்­சி­னை­யாக உருவெடுத்துள்ளது

3 mins read
df6d9fcb-9325-4fd9-9fb0-468156641e9d
உல­கில் உள்ள ஒவ்­வொரு மனி­த­ரும் ஒவ்­வொரு நாளும் தம்­மைத் தாமே கொஞ்­சம் நேசிக்­க­வேண்­டும் என்று கூறுகிறார் காயத்ரி. படம்: ஊடகம் -

அச்­சம் என்­பது நாம் பார்க்க எப்­படி இருக்­கி­றோம் என்­ப­தால் வரு­வ­தல்ல. அது ஒரு மன­நிலை என்­கி­றார் நடிகை காயத்ரி.

தமி­ழில் தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்­போது தெலுங்­கி­லும் கவ­னம் செலுத்தி வரு­கி­றா­ராம்.

கொரோனா கிரு­மித் தாக்­கத்­தால் திரை­யு­ல­கத்­தி­னர் வீட்­டில் முடங்கி உள்­ள­னர். ஆளா­ளுக்கு தின­மும் சமூக வலைத்­தங்­களில் ஏதே­னும் பதி­வி­டு­வது, காணொளி வெளி­யி­டு­வது எனப் பொழு­தைப் போக்­கிக் கொண்டு இருக்­கி­றார்­கள். இந்­நி­லை­யில் காயத்­ரி­யும் தமது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் புகைப்­ப­டம் ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார். அந்­தப் படத்­து­டன் தொடர்­பு­டைய சம்­ப­வத்­தை­யும் நினைவு கூர்ந்­துள்­ளார்.

"இது ஒரு பழைய புகைப்­ப­டம் அப்­போது இந்­தப் படத்­துக்­காக போஸ் கொடுத்து நின்­ற­போது என் மன­தில் தன்­னம்­பிக்கை இல்லை.

"அப்­போது என் உடல்­வாகு குறித்து எனக்கு அச்­சம் இருந்­தது. ஆனால், எனது உடல்­வாகு குறித்து அச்­சப்­ப­டு­கி­றேன் என்று சொல்­வதை சிலர் வேறு­மா­தி­ரி­யாக எடுத்­துக் கொள்­கி­றார்­கள்.

"நான் ஏதோ பித்­துப் பிடித்து பேசு­வது போன்று சிலர் கரு­து­கி­றார்­கள்.

"என்­னைப் பொறுத்­த­வரை உண்­மை­யில் அச்­சம் என்­பது ஒரு மன­நிலை. நாம் பார்ப்­ப­தற்கு எப்­படி இருக்­கி­றோம் என்­ப­தால் வரு­வ­தற்­குப் பெயர் அச்­சம் இல்லை," என்று காயத்ரி தெரி­வித்­துள்­ளார்.

மன­ந­லம் என்­ப­து­தான் தற்­போது அதி­கம் கவ­னிக்­கப்­ப­டாத பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்து வரு­கிறது என்று குறிப்­பி­டு­ப­வர், அனை­வ­ரும் இந்த விஷ­யத்­தில் கவ­னம் செலுத்­த­வேண்­டும் என்று வலி­யு­றுத்தி உள்­ளார்.

"எனது இந்­தப் பதிவை பலர் படிப்­பீர்­கள். கண்­ணா­டி­யில் பார்க்­கும்­போது உங்­க­ளி­டம் எது நன்­றாக இல்லை என்­பது உங்­க­ளுக்­குத் தெரி­ய­வ­ரக்­கூ­டும். ஆனால் அப்­படி உண­ருபவர் நீங்­கள் மட்­டு­மல்ல என்­ப­தைப் புரிந்­து­கொள்ள வேண்­டும். இது நம் எல்­லோ­ருக்­குமே பொது­வான நிகழ்­வு­கள்­தான்.

"ஒவ்­வொரு தழும்­பும் மச்­ச­மும் உங்­க­ளு­டைய பய­ணத்­தில் ஒரு மைல் கல். ஒவ்­வொரு கதை­யும் தனித்­து­வ­மா­னது. அது­தான் உங்­களை உரு­வாக்கி உள்­ளது. அதை ஏற்­றுக்கொள்­ளுங்­கள், நேசி­யுங்­கள்," என்று காயத்ரி தெரி­வித்­துள்­ளார்.

உல­கில் உள்ள ஒவ்­வொரு மனி­த­ரும் ஒவ்­வொரு நாளும் தம்­மைத் தாமே கொஞ்­சம் நேசிக்­க­வேண்­டும் என்று அறி­வு­றுத்தி உள்ள அவர், இந்­தப் பழக்­க­மா­னது நீண்­ட­நாள் நன்மை பயக்­கும் என்று குறிப்­பிட்­டுள்­ளார். தமது இந்த அறி­வு­றுத்­தலை அனை­வ­ரும் நம்­ப­வேண்­டும் என்று கேட்­டுக் கொண்­டுள்ள அவர், இத­னால் விளை­யக்­கூ­டிய நன்மை அனை­வ­ரை­யும் மகிழ்­விக்­கும் என்­கி­றார்.

"என்­மீதே நான் அன்பு செலுத்­த­வும் என்னை ஊக்­கப்­ப­டுத்­து­வ­தி­லும் சிலர் முக்­கிய பங்­காற்­று­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு என்­றும் நன்­றிக்­க­டன் பட்­டுள்­ளேன். மன­ந­லம் என்­பது நிச்­ச­யம் கவ­னிக்­கப்­பட வேண்­டிய ஒன்று. இதைச் செய்­யாத பட்­சத்­தில் நிச்­ச­ய­மாக நாம் பாதிக்­கப்­ப­டு­வோம்," என்று காயத்ரி தமது பதி­வில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

இவர் மன­ந­லம் முக்­கி­யம் என்­கி­றார். காஜல் அகர்­வாலோ மன அமைதி முக்­கி­யம் என்­கி­றார்.

வாழ்க்­கை­யைப் பற்றி புரிந்­து­கொண்ட பிறகு மன அமை­தி­யைத் தவிர முக்­கி­ய­மா­னது வேறு எது­வும் இல்லை என்­பதை உணர்ந்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் காஜல்.

இனி எந்­த­மா­தி­ரி­யான நெருக்­க­டி­யும் இல்­லா­மல் அமை­தி­யாக இருப்­ப­தையே தாம் விரும்­பு­வ­தாக அவர் அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"எவ்­வ­ளவு பண­மி­ருந்­தா­லும் மன அமைதி இல்­லா­மல் போனால் என்ன பயன்? இப்­போது கொரோனா கிரு­மித் தொற்­றால் மக்­கள் பல்­வேறு இன்­னல்­களை அனு­ப­விக்­கும் வேளை­யில் பணத்தைவிட மன அமை­தி­தான் முக்­கி­யம் என்­பது எல்­லோ­ருக்­குமே புரிந்­தி­ருக்­கும்.

"சிறு வய­தில் நான் கூட எல்லா வச­தி­க­ளு­டன் ஆடம்­ப­ர­மாக வாழ்­கி­ற­வர்­க­ளைப் பார்க்­கும்­போது நாமும் இப்­படி வாழ வேண்­டும் என்று நினைத்­தேன். ஆனால் இப்­போது வாழ்க்­கையைப் பற்றி புரிந்து கொண்­டேன். இனி வாழ்க்­கை­யில் எதை நோக்­கிச் செல்ல வேண்­டும், எதற்கு முக்­கி­யத்­து­வம் அளிக்க வேண்­டும் என்­ப­தில் தெளிவு ஏற்­பட்­டுள்­ளது," என்று காஜல் அகர்­வால் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

நடி­கை­கள் பல­ரும் இப்­படி தத்­து­வார்த்­த­மா­க­வும் முதிர்ச்­சி­யு­ட­னும் பேசத் தொடங்கி உள்­ள­னர். திரை­யு­ல­கில் மட்­டு­மல்­லா­மல் திரை­யு­ல­கத்­தி­னர் மன­தி­லும் கொரோனா கிருமி விவ­கா­ரம் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.