கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமியும் ஸ்ரேயாவும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள 'நரகாசூரன்' சில சிக்கல்கள் காரணமாக இதுவரை வெளியீடு காணவில்லை.
இந்நிலையில் இணையதளத்தில் இப்படம் வெளியாகும் என அண்மையில் தகவல் வெளியானது. இதையடுத்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். எனினும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் இணைய தளத்தில் வெளியிடுவதே தயாரிப்பாளருக்கு நல்லது என சிலர் கூறுகின்றனர்.
ஆனால் பட தயாரிப்புத் தரப்பில் இருந்து இது குறித்து எந்த அறிவிப்பும் கருத்தும் இதுவரை வெளிவரவில்லை.

