விவசாயத்தில் கவனம் செலுத்தும் கீர்த்தி பாண்டியன்

விவசாயத்தில் கவனம் செலுத்தும் கீர்த்தி பாண்டியன்

1 mins read
566d16b7-c840-4669-9b05-ecf55d865c4c
ஊரடங்கு வேளையில் விவசாயத்தில் கவனம் செலுத்துகிறார் நடிகை  கீர்த்தி பாண்டியன்.  படம்: ஊடகம் -

ஊரடங்கு வேளையில் விவசாயத்தில் கவனம் செலுத்துகிறார் நடிகை கீர்த்தி பாண்டியன்.

தனது விவசாய நிலம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதால் தாம் ஊரடங்கு உத்தரவை மீறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவில் விவசாய நிலம் ஒன்றில் டிராக்டர் ஓட்டியபடி கீர்த்தி நிலத்தை உழுவது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.

"கொரோனா விடுமுறையில் சொந்த நிலத்தில் உழுவதற்காக கிராமப் பகுதிக்கு வந்துள்ளேன். இது சுற்றிலும் வேலிகள் அமைத்து தனிமைப்படுத்தப்பட்ட இடம். பொது இடமல்ல.

"எனவே சொந்த நிலத்தில் உழுவது ஊரடங்கை மீறுவதாக ஆகாது. நாங்கள் அரசின் உத்தரவுகளை மதிக்கிறோம்," என்று பதிவிட்டுள்ளார் நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி.