வித்­யா­பா­லன்: முன்னணி நாயகர்கள் என்னை ஒதுக்கினர்

வித்­யா­பா­லன்: முன்னணி நாயகர்கள் என்னை ஒதுக்கினர்

2 mins read
e78194cb-db2c-4264-84df-e6e70e862ca4
முன்­னணி நாய­கர்­கள் தம்மை ஒதுக்­கி­ய­தால் தாம் முடங்­கி­வி­ட­வில்லை என்­கி­றார் வித்­யா­பா­லன். படம்: ஊடகம் -

ஊர­டங்கு வேளை­யில் முன்­னணி நடி­கர், நடி­கை­கள் சமூக வலைத்­த­ளங்­களில் சுறு­சு­றுப்­பாக இயங்கி வரு­கின்­ற­னர். அவர்­களில் சில­ரது அண்­மைய பதி­வு­க­ளைப் பார்ப்­போம்

முன்­னணி நாய­கர்­கள் தம்மை ஒதுக்­கி­ய­தால் தாம் முடங்­கி­வி­ட­வில்லை என்­கி­றார் வித்­யா­பா­லன்.

அவ்­வாறு தாம் ஒதுக்­கப்­ப­டு­வதை உணர்ந்­த­போது நல்ல கதை­க­ளின் பக்­கம் தன் கவ­னம் திரும்­பி­ய­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தொடக்­கத்­தில் எனக்­கான வாய்ப்­பு­கள் தடை­யின்றி கிடைத்­தன. எனி­னும் முன்­னணி நடி­கர்­க­ளு­டன் என்னை நடிக்க வைப்­பது குறித்து யாரும் யோசிக்­க­வில்லை. அவர்­க­ளால் நான் ஓரங்­கட்­டப்­ப­டு­வ­தாக, நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தாக உணர்ந்­தேன். ஆனால் அதற்­காக சிறி­தும் வருத்­தப்­ப­ட­வில்லை. இதை­ய­டுத்­து­தான் நல்ல கதை­களில் நடிக்க வேண்­டும் என முடிவு செய்­தேன். ஏனெ­னில் என்­னைப் பொறுத்­த­வரை நல்ல கதை­யம்­சம் கொண்ட படங்­கள்­தான் திரை­யு­ல­கின் ஆத்மா," என்­கி­றார் வித்­யா­பா­லன்.

நல்ல, வித்­தி­யா­ச­மான கதை­களில் நடிக்­கத் துவங்­கிய பிறகே ரசி­கர்­கள் தம்மை கவ­னிக்­கத் தொடங்­கி­ய­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், அதன்­பி­றகே தமக்கு நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்­த­தாக குறிப்­பிட்­டுள்­ளார்.

திரை­யு­ல­கைப் பொறுத்­த­வரை எல்லா நடி­கை­க­ளுமே நாய­கி­யாக நடிக்­கத்­தான் விரும்­பு­வார்­கள். ஆனால் ரெஜி­னா­வுக்கு மட்­டும் வில்­லி­யாக நடிக்க வேண்­டும் என்று விருப்­ப­மாம்.

அண்­மைய பேட்­டி­யில் தமது இந்த விருப்­பத்தை அவர் வெளிப்­ப­டுத்தி உள்­ளார்.

'மங்­காத்தா' படத்­தில், 'எவ்­வ­ளவு நாள்­தான் நான் நல்­ல­வ­னா­கவே நடிக்க முடி­யும்' என்று வச­னம் பேசு­வார் அஜித். அதைத்­தான் ரெஜி­னா­வும் இப்­போது சொல்­கி­றார்.

"நேர்­ம­றை­யான கதை­களில் நடித்து போர­டித்து விட்­டது. அத­னால்­தான் எதிர்­மறை வேடங்­களில் அதா­வது வில்­லி­யாக நடித்­துப் பார்க்க விரும்­பு­கி­றேன். நிச்­ச­ய­மாக இந்த மாற்­றம் ரசி­கர்­க­ளுக்­குப் பிடிக்­கும் என நம்­பு­கி­றேன்.

'மாஸ்­டர்' படம் குறித்து நடிகை ஆன்ட்­ரியா வெளி­யிட்ட தக­வல் விஜய் ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி உள்­ளது.

விஜய்­யு­டன் இணைந்து நடித்­ததை மறக்­கவே இய­லாது என்­கி­றார் ஆன்ட்­ரியா.

அண்­மைய பேட்டி ஒன்­றில் 'வட­சென்னை' படத்­தில் தாம் நடித்­தி­ருக்­கவே கூடாது என்று அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

"அப்­படி ஒரு கதா­பாத்­தி­ரத்­தில் நடித்த பிறகு தொடர்ந்து அதே­போன்ற வேடங்­கள்­தான் தேடி வரு­கின்­றன. என் திரை வாழ்க்­கை­யில் நான் செய்த மிகப்­பெ­ரிய தவறு 'வட­சென்னை'யில் குறிப்­பிட்ட அந்­தக் கதா­பாத்­தி­ரத்தை ஏற்று நடித்­த­து­தான்.

"'மாஸ்­டர்' படத்­தில் நடித்­தி­ருப்­பது இந்த வருத்­தத்தை மறக்­கச் செய்­துள்­ளது. அதில் இடம்­பெற்­றுள்ள ஒரு கார் துரத்­தல் காட்­சி­யில் விஜய் சாரு­டன் இணைந்து நடித்­தேன். அது மிக­வும் பர­ப­ரப்­பான காட்­சி­யாக இருக்­கும். விஜய் ரசி­கர்­க­ளுக்கு நிச்­ச­யம் பிடிக்கும்," என்று ஆன்ட்­ரியா தெரி­வித்­துள்­ளார்.