தம்மிடம் பணம் குறைவாகத்தான் உள்ளது என்றாலும் சமூகப் பணிகளைத் தொடர்ந்து செய்யப் போவதாகச் சொல்கிறார் பிரகாஷ்ராஜ்.
இந்தக் கடினமான தருணத்தில் இருந்து மீள அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
"என்னிடம் நிதி குறைவாக உள்ளது. எனினும் நான் கடன் வாங்கியாவது தொடர்ந்து சமூகப் பணிகளைச் செய்வேன். ஏனென்றால் என்னால் மீண்டும் சம்பாதிக்க முடியும்.
"எனவே கையிருப்பு உள்ள வரை உதவுவேன். அதன் பிறகு கடன் வாங்கி ஏழைகளுக்காகச் செலவிடுவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை," என்கிறார் பிரகாஷ்ராஜ்.
தமது அறக்கட்டளை மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இவர் உதவி செய்து வருகிறார். அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி வருகிறார்.
அவரைப் பலரும் பாராட்டி உள்ளனர்.

